சிரிக்கும்போது சிலர் வாயை மூடிக் கொள்வார்கள். சிலர் பேசும்போதே பற்களை மறைத்து பேசுவார்கள். இதற்கு பற்கள் வெண்மையாக இல்லை என்பது தான் பிரதானமான காரணம். மஞ்சள் நிற பற்களை பலர் அடியோடு வெறுக்கின்றனர். ஆனால் அனைவரின் பற்களும் வெண்மையானவை இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.
பல ஷேடுகளில் பற்களின் வண்ணம் உள்ளது. வெளிர் மஞ்சள் வண்ணம் முதல் வெள்ளை நிறம் வரை ஒவ்வொரு தனிமனிதருக்கும் பற்களின் நிறம் மாறுபடும். சிலர் வெண்மையான பற்களுக்காக உப்பை வைத்து பல் துலக்குகிறார்கள். இது சரியா என நிபுணரிடம் கேட்டோம்.
கல் உப்போ, தூள் உப்போ எதைக் கொண்டும் பல் துலக்க கூடாது. அப்படி செய்வதால் உங்களுடைய ஈறுகள் பாதிப்படையும். ஈறுகளில் இருக்கும் மென்மையான திசுக்கள் உப்பால் பாதிக்கப்படைந்து புண் ஏற்படும். உப்பை வைத்து பல் துலக்கினால் பற்களின் மேல் உள்ள எனாமல் தேயும். அதை செய்யவேக் கூடாது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான ஷேடில் பற்களின் நிறம் இருக்கும். ஆகவே, பற்களை வெண்மையாக மட்டும் தான் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணைத்தை கைவிடுங்கள். பற்களை சுத்தமாக வைத்திருப்பது தான் அவசியம். நாளடைவில் பற்கள் மஞ்சள் தோற்றம் பெற்றிருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.