பல்லி தொல்லையா? ஒரே ஒரு பூண்டு போதும்.. இப்படி பண்ணி பாருங்க!

First Published Feb 6, 2023, 6:55 PM IST

பல்லிகளை விரட்டியடிக்க முக்கியமான சில டிப்ஸ்...பல்லி தொல்லை முற்றிலும் நீங்கும். 

பல்லி தொல்லை எல்லா வீடுகளிலும் இருக்கும் பொதுவான பிரச்சனை. பல்லி மேலே விழுந்தால் பரிகாரம் செய்ய சொல்லி முன்னோர் அறிவுறுத்துவார்கள். பல்லி எச்சம் உணவில் விழுந்தால் அலர்ஜி ஆகும். பல்லி விழுந்தாலும் உடலுக்கு தீங்குதான். அருவருப்பைத் தூண்டும் பல்லிகளை எப்படி விரட்டுவது என்பதை இங்கு காணலாம். 

பல்லிகளின் எங்கு இருக்குமோ அந்த பகுதியில் வெங்காயம், பூண்டு ஆகியவற்றின் சாற்றை தெளியுங்கள். அந்த வாசனைக்கே பல்லி தலை தெறிக்க ஓடிவிடும்.  

பல்லிகள் உலவும் பகுதியில் வெங்காயத்தை குட்டி துண்டுகளாக நறுக்கி வைத்தால் போதும். அதில் வரும் சல்ஃபர் வாசனைக்கு பல்லிகள் ஓடிவிடும். இதைப் போல பூண்டையும் நறுக்கி வைக்கலாம். 

வீட்டில் மயிலிறகை வைத்தால் பல்லிகள் வராது. இதனால் வீடும் அழகாக மாறும். இந்த டிப்ஸ் தவிர ஜன்னல்களில் கொசு வலைகளை பொருத்துங்கள். வீட்டில் இருக்கும் அவசியமில்லாத துளைகளை மூடுங்கள். அங்கு தான் அவை வசிக்கும். அப்படியான பகுதிகளை நாம் அடைத்து வைப்பது அவசியம். இப்படியெல்லாம் செய்வதால் பல்லிகளை விரட்டலாம். 

முட்டை ஓட்டின் வாசனையை பல்லிகள் விரும்பாது. அடிக்கடி பல்லிகள் உலாவும் இடத்தில் முட்டை ஓட்டை வைத்துவிடுங்கள். அந்த வாசனையை உணர்ந்தால் அவை விலகி ஓடும். 

பல்லிகள் மிதமான வெப்பநிலையை விரும்பும். நம் வீட்டு அலமாரிகளையும் பெட்டிகளையும் எப்போதும் தூய்மையாக வைக்க வேண்டும். பல்லியை கொன்று குவிக்காமல் அவற்றை விரட்ட, முதலில் பல்லிகள் கூடுவதைத் தடுக்க வேண்டும். வீட்டு குழாய்களில் நீர் கசிவு உருவானால் உடனே சரிசெய்ய வேண்டும். 

click me!