தண்ணீரை நின்று கொண்டு குடித்தால் ஆபத்தா? அமர்ந்த நிலையில் நீர் அருந்த அறிவுறுத்தும் நிபுணர்கள், ஏன் தெரியுமா?

First Published Feb 6, 2023, 2:04 PM IST

தண்ணீர் அருந்தும்போது எந்த நிலையில், எப்படி அருந்த வேண்டும் என்பதை சுகாதார நிபுணர்கள் விளக்குகின்றனர். 

தண்ணீர் நம் வாழ்வில் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. நம் உடல் நீரேற்றமாக இல்லாமல் போனால், பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். அதே நேரத்தில் தண்ணீரை எப்படிக் குடிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம் என்கிறார்கள் சுகாதார நிபுணர்கள். தண்ணீர் குடிப்பதற்கு என ஒரு முறை உள்ளது. அப்படி தண்ணீர் அருந்துவது ஏன் அவசியம்? என்பதை இங்கு காணலாம். 

வெளியே சென்று திரும்பியதும் மிகவும் குளிர்ந்த நீரை அருந்தக் கூடாது என பெரியவர்கள் சொல்வார்கள். அதை காது கொடுத்து நாம் கேட்பதில்லை. அதை போல் நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதும் உடலுக்கு நல்லதல்ல. ஏனெனில், இப்படி அருந்துவதால் மூட்டுவலி ஏற்படலாம். நின்றபடி, நீர் அருந்துவதால் நம் உடலில் உள்ள திரவங்களின் சமநிலை மாறுகிறது. இதனால் மூட்டுகளில் திரவம் உருவாகத் தொடங்குகிறது. இது எதிர்காலத்தில் மூட்டுவலிக்கு வழிவகுக்கும். 

நாம் நின்று கொண்டு தண்ணீர் அருந்தினால் வயிற்று பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. இதனால் செரிமான அமைப்பு பலவீனமாகும். சிலருக்கு இரைப்பைக் குழாய் பாதிப்பு உண்டாகும். உண்மையில் நின்றபடி, தண்ணீர் குடித்தால் முழு தாகமும் அடங்காது என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 

அதே சமயம் உட்கார்ந்து தண்ணீர் அருந்தினால் தசைகள், நரம்பு மண்டலம் ஓய்வெடுக்க வாய்ப்பாக அமையும். இதனால் உணவுகளை விரைவாக ஜீரணிக்க நரம்புகள் தூண்டப்படுகின்றன. நின்றபடி தண்ணீர் குடித்தால் உணவுக் குழாயின் கீழ் பகுதி பாதிக்கிறது. இது வயிற்றுக்கும், உணவுக்குழாய்க்கும் இடையே உள்ள பொதுவான ஸ்பிங்க்டரை பாதிக்கும். இது வயிற்று எரிச்சலை ஏற்படுத்தும். 

நின்றுகொண்டே தண்ணீர் குடித்தால், சிறுநீரகம் அந்த தண்ணீரைச் சரியாகச் சுத்தம் செய்யாதாம். இதனால் சிறுநீரகங்களில் அழுக்கு சேரத் தொடங்கும். இதன் காரணமாக சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலும், வலியும் உண்டாகும். ஆகவே எப்போதும் தண்ணீரை அமர்ந்த நிலையில் தான் அருந்த வேண்டும். 

பால் அருந்தும்போது நின்று கொண்டே அருந்தலாம் என ஆயுர்வேதம் சொல்கிறது. இதனால் பால் எளிதில் செரிமானம் ஆகுமாம். பால் அருந்துவது செரிமான அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எழுந்து நின்றபடி, மிதமான சூடுள்ள பால் அருந்துவது உடலில் நல்ல மாற்றத்தை உண்டாக்கும். இதனால் மூட்டு வலி கூட நீங்கும் என கூறப்படுகிறது. பாலில் புரதச்சத்து உள்பட பல சத்துக்கள் உள்ளன. இதை அருந்துவதால் கால்சியம் சத்து கிடைக்கும், எலும்புகள் வலுப்படும்.  

இதையும் படிங்க: வாரம் ஒரு தடவை டிராகன் பழம் சாப்பிட்டால், உடலுக்கு அளவில்லா நன்மைகள் உறுதி.. மிஸ் பண்ணாதீங்க!

இதையும் படிங்க: வெறும் 2 நிமிடங்களில் சர்க்கரை வியாதிக்கு அருமருந்தாகும் கொய்யா இலை... எப்படி பயன்படுத்தனும் தெரியுமா?

click me!