மன உளைச்சலுக்கு புல் ஸ்டாப்! இனிமேல் துறவி மாதிரி யோசிச்சு பழகுங்க!

First Published Feb 4, 2023, 7:25 PM IST

துறவி போல யோசிக்கும்போது வாழ்வின் பல பிரச்சனைகளை எளிமையாக கையாள முடியும். 

மனிதர்களின் ஆசையே துன்பத்திற்கு காரணம் என புத்தர் மகான் சொல்லியிருக்கிறார். உண்மையில் ஆசையில்லை, அலைபாயும் மனம் தான் மனிதனின் துன்பத்திற்கு காரணம். ஒன்றிலிருந்து இன்னொரு கிளைக்கு தாவும் குரங்கு போல மனித மனம் அலைபாய்கிறது. அதுவே துன்பத்தை கொண்டு வருகிறது. இதை கடந்து வர துறவி போல சிந்திக்க வேண்டியிருக்கிறது. 

Image: Getty Images

குரங்கு மனமா, துறவி மனமா? 

குரங்கு மரத்திற்கு மரம் தாவுவதை போல, மனிதர்களின் மனமும் தாவி கொண்டே இருக்கிறது. அதாவது ஒரு பிரச்சனையில் இருந்து மற்றொரு பிரச்சனைக்கு மனிதன் தாவுகிறான். அவ்வப்போது கிடைக்கும் சிற்றின்பங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறான். நீங்களும் அப்படிதான் நடந்து கொள்கிறீர்களா? ஆனால் உங்களுக்கு தெரியுமா? துறவிகள் பிரச்சனையை தவிர்க்கமுடியாது என்பதை புரிந்து கொள்கிறார்கள். பிரச்சனையின் வேர் என்ன என்பதை ஆராய்ந்து தீர்வு காண்கிறார்கள். சிற்றின்பங்களுக்கு அல்ல; நிலையான இன்பத்திற்கு உழைக்க வேண்டும் என்பதை துறவி மனம் புரிந்து கொள்கிறது. 

நாளை என்ற விஷயத்தை நினைத்து மனிதன் பயப்படும்போது வாழ்க்கையின் இக்கணத்தை அனுபவிக்காமல் தவறவிடுகிறான். ஓஷோவின் கூற்றுப்படி, கரப்பான் பூச்சிகளும், மனிதர்களும் மட்டுமே தங்களுடைய வாழ்க்கையை செம்மையாக்கிக் கொள்ள வல்லமை கொண்டிருக்கின்றனர். வாழ்க்கையில் பயத்தை விட்டுவிடுதலே பிரச்சனைகளை எதிர்கொள்ள துணிவை தரும். இதற்கு மனதின் பயங்களை ஆழமாக அறிவது அவசியம். 

உங்களை சுற்றியிருக்கும் அத்தனை அழகான விஷயங்களையும் நினைத்து மகிழுங்கள். அதை அனுபவியுங்கள். புதிய சவால்களை எதிர்கொள்ள தயாராக இருப்பவர்கள் முன்னேறி கொண்டே இருப்பார்களாம். துறவிகள் கடந்தகாலத்தை வெறும் பாடங்களாக நினைத்து கடந்துவிடுவார்கள். நிகழ்காலத்தில் முழுமையாக வாழ்வார்கள். 

"ஒவ்வொரு கணமும் நீ என்ன செய்தாலும் அதை முழுமையாக செய். எளிமையாக விஷயங்கள், குளிக்கும் பொழுது முழுமையாக குளி, முழு உலகத்தையும் மறந்து விடு. உட்காரும்பொழுது உட்கார். நடக்கும் பொழுது நட. எல்லாவற்றிற்கும் மேலாக தள்ளாடாதே. குளியல் அறையில் உட்கார்ந்திருக்கும்போது முழு பிரபஞ்சமும் உன் மேல் விழட்டும். உன் மேல் விழும் அந்த அழகான நீர் துளிகளோடு இணைந்திரு. -ஓஷோ"

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது அந்தந்த கணங்களை முழுமையாக அனுபவித்தல். பிரச்சனைகளிலிருந்து தப்பிக்காமல் அதை சமாளித்தல். சவால்களை எதிர்கொள்தல். அதை உணர்ந்து நலம் வாழ வாழ்த்துகள்! 

இதையும் படிங்க: Negative Thinking: எப்பவுமே எதிர்மறை சிந்தனையா? இந்த கதையை படிச்சா ஆளே மாறிடுவீங்க!

இதையும் படிங்க: தினமும் இளநீர் குடிக்கிறது ரொம்ப தப்பு.. நிபுணர்கள் ஏன் எச்சரிக்கிறார்கள்?

click me!