இளநீர் எனும் இயற்கை பானத்தில் பல வகையான சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இது நம் உடலில் எலக்ட்ரோலைட்டுகளை அதிகரிப்பதோடு, சருமம் பளபளப்பாக இருக்கவும் உதவுகிறது. உடல் வெப்பத்தினால் நீர்ச்சத்து குறையாமல் இருக்கவும் உதவுகிறது. இப்படி இதில் இருக்கும் பயன்களுக்காக பலர், தினமும் இளநீரை விரும்பி குடிக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது என்கின்றனர் நிபுணர்கள். அது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
இளநீரை தினமும் குடிப்பதால் உங்கள் உடலில் பொட்டாசியம் அளவு அதிகரிக்கிறது. இதனால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் தினமும் இளநீர் அருந்தினால், ரத்த அழுத்தம் வெகுவாக குறையும். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிக்கலான நிலைக்கு செல்லும். இளநீரில் காணப்படும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைக்கும். அதனால் இளநீரை அடிக்கடி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
தினமும் இளநீர் அருந்தினால் வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும். இதில் புளிக்கக்கூடிய ஒலிகோசாக்கரைடுகள், டிசாக்கரைடுகள், மோனோசாக்கரைடுகள், பாலியோல்கள் (FODMAP) ஆகியவை உள்ளன. இவை குறுகிய சங்கிலி அமைப்புடைய கார்போஹைட்ரேட்டுகள். இவை குடலில் இருந்து தண்ணீரை உறிஞ்சுகின்றன. இதனால் பலருக்கு வயிற்றுப்போக்கு மாதிரியான செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
இளநீரை சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இளநீரை குடிப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்கும். சர்க்கரை நோய் இருந்தால் மருத்துவரிடம் கேட்ட பிறகே இளநீர் அருந்துவது நல்லது. அதுவும் கொஞ்சமாக..தான்.