ஐஸ்வர்யா ராய் வீட்டு கதவை தட்டி டார்ச்சர் செய்த சல்மான் கான்... உலக அழகி சந்தித்த பிரச்சனைகள் இவ்வளவா?

First Published | Feb 3, 2023, 3:30 PM IST

திரையுலகில் அனைவரின் உள்ளங்களையும் கொள்ளையடித்த ஐஸ்வர்யா ராய், காதலில் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம். 

நடிகை ஐஸ்வர்யா ராய் பல ஆண்டுகளாக திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அவருடைய வனப்பு மட்டுமில்லை, தனித்துவமான நடிப்பும் தான் அதற்கு காரணம். டூயட் பாடல்களில் ஐஸ்வர்யா ராய் கொடுக்கும் எக்பிரஷன்கள் கிளாஸாக இருக்கும். நடிக்க வந்த காலம் முதலாகவே அவர் காதல் விவகாரங்களில் பல கிசுகிசுக்கள் பிரபலம். இந்த கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2007ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் திருமணம் நடந்தது. ரசிகர்களுக்கு தெரியாத நடிகை ஐஸ்வர்யாவின் காதல் வாழ்க்கை குறித்து இங்கு காணலாம். 

நடிகைகள் வாழ்க்கையே வதந்திகளால் புனையப்பட்டதுதானே. நடிகை ஐஸ்வர்யா ராயும் அதில் விதிவிலக்கில்லை. அவர் மாடலிங் செய்யும்போது ராஜுவ் முல்ஷாந்தானி என்பவரை காதலித்ததாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Tap to resize

நடிகர் அபிஷேக் பச்சனுடன் திருமணமாகும் முன்பு சில நடிகர்களுடன், ஐஸ்வர்யா ராய் கிசுகிசுக்கப்பட்டார். இந்தி சினிமாவில் பிசியாக இருந்த சமயத்தில் சல்மானுடன் ஐஸ்வர்யா ராய் காதல் உறவில் இருப்பதாக கூறப்பட்டது. 1999ஆம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வெளிவந்த 'ஹம் தில் தே சுகே சனம்' படத்தில் சல்மானும், ஐஸ்வர்யாவும் இணைந்து நடித்தனர். அப்போதுதான் அவர்களுக்குள் உறவு மலர்ந்ததாகக் கூறப்பட்டது. 

சல்மானும், ஐஸ்வர்யாவும் காதலில் திளைத்தது ரொம்ப காலம் இல்லை. வெறும் இரண்டு வருடங்களில் அந்த உறவு முடிந்து போனதாம். சல்மான் கானின் முரட்டு கோபமும், வீணா போன பொசசிவ்னெஸும் தான் ஐஸ்வர்யா ராயுடனான உறவை முறித்து கொள்ள காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. காதல் உறவு முடிந்த பிறகும் சல்மான் ஐஸ்வர்யா ராய்யை விடவில்லையாம். அவருடைய வீட்டிற்கே சென்று கூச்சல் போடுவாராம். ஐஸ்வர்யா ராய் வெளியே வந்து அவரை உள்ளே அழைக்கும் வரையிலும் கதவை தட்டி கொண்டே இருப்பாராம். அட பாவமே! 

சல்மான்கான் செய்த டார்ச்சர் ஓவராக ஆன பிறகு நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை போலீஸில் புகாரளித்தாராம். ஆனால் அதனால் எந்த பயனும் கிடைக்கவில்லை. ஐஸ்வர்யா ராய் நடித்து கொண்டிருந்த chalte chalte என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று பிரச்சனை செய்வாராம் சல்மான். இந்த பிரச்சனைகளால் அந்த படத்தின் வாய்ப்பு ஐஸ்வர்யா ராயிடம் இருந்து நடிகை ராணி முகர்ஜிக்கு சென்றது. 

சல்மானின் உறவுக்கு முடிவு வந்த பிறகு நடிகை ஐஸ்வர்யா ராய், விவேக் ஓபராயுடன் மீண்டும் காதலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த காதலை குறித்து ஐஸ்வர்யா எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நடிகர் விவேக் ஓபராய் காபி வித் கரன் சீசன் -1 நிகழ்ச்சியில் இது குறித்து பேசியுள்ளார். இந்த விஷயம் குறித்து ஐஸ்வர்யா ராயின் விருப்பத்தை குறித்து தெரிந்து கொள்ளாமலே அவர் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். 

இதையும் படிங்க: ஐஸ்வர்யா ராயின் அசரடிக்கும் அழகின் சீக்ரெட் என்ன? இவ்வளவு பணம் இருந்தும் சிம்பிளா அவர் செய்யும் காரியம்..

பலவிதமான காதல் நச்சரிப்புகள் ஓய்ந்த பிறகு, ஒரு நன்னாளில் ஐஸ்வர்யா ராய்க்கு நடிகர் அபிஷேக் பச்சன் மீது காதல் பூத்தது. இயக்குநர் மணிரத்னம் இயக்கிய குரு திரைப்பட படப்பிடிப்பு காலத்தில் தான் இந்த காதல் மெருகேறியுள்ளது. 'உம்ரோ ஜான் என்ற' இந்தி திரைப்படத்தில் நடிக்கும்போது தான் ஐஸ்வர்யா ராய் மீது காதல் கொண்டதாக ஒரு செய்தியாளர் சந்திப்பில் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். இப்போது இருவரும் திரைத்துறையே வியந்து பார்க்கும் நல்ல ஜோடியாக வலம் வருகின்றனர். உண்மையான காதல் எத்தனை தடை வந்தபோதும், தனக்கானவர்களை உடன் வைத்திருக்கும் என்பதற்கு ஐஸ்வர்யா ராயின் காதல் பயணம் சான்று.

இதையும் படிங்க: அம்பானி மருமகள் என்றால் சும்மாவா? அவங்க பேக் விலையே ரூ.35 லட்சம், ஆடைகளின் விலையை கேட்டா ஆடி போய்டுவீங்க!

Latest Videos

click me!