உடலுறவு முடிந்த பிறகு சிறுநீர் கழிப்பதால் உங்களுடைய பி.எச் (pH) சமநிலை கட்டுக்குள் இருக்கும். இதை செய்வதால் சிறுநீர் பாதையில் தோன்றும் நோய்த்தொற்றுக்கான ஆபத்து குறைகிறது. உடலுறவுக்கு பிறகு சிறுநீர்ப்பையை காலி செய்வதால் உடலுறவின் போது சிறுநீர்க்குழாய்க்குள் நுழைந்திருக்கும் பாக்டீரியாக்கள் வெளியேறும்.
பெண்களின் யோனியை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வது நல்லது. பொழிச்சென தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தால் யோனியில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை நீக்குவிடும். அதனால் வெஜினாவின் pH சமநிலை சீராக இருக்காது. பொழிச்சென்று தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்வதால் கருத்தரித்தல் அல்லது பாலியல் ரீதியாக பரவும் நோய்களைத் தடுப்பதற்குப் பதிலாக, தொற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கலாம். இது கர்ப்பகால சிக்கல்களுக்கும் வழிவகுக்கும். யோனியை சுத்தம் செய்வதற்காக வாசனையுள்ள திரவங்கள் அல்லது கடுமையான இரசாயனப் பொருள்களை உபயோகம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
உடலுறவு முடிந்ததும் சிறுநீர் கழிப்பது நல்லது. அதன் பிறகு யோனியை சோப்பு போட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். இதற்காக வாசனை அல்லது அதிக இரசாயனங்கள் இல்லாத சோப் பயன்படுத்துவது நல்லது. இது வெளிப்புறத்தில் இருக்கும் வியர்வை, விந்து பாக்டீரியாவைக் கழுவ உங்களுக்கு உதவும். இதை செய்ய மறந்தால் பாலியல் தொற்றுநோய் வரலாம். இது உங்கள் கணவருக்கும் பரவலாம்.
உங்களுடைய யோனியை தவறான வழியில் சுத்தம் செய்வது சிறுநீர் தொற்று பாதை நோய் (urinary tract infection) ஏற்படுத்தும். யோனியை முன்னிருந்து பின்பக்கமாக துடைப்பதால் பாக்டீரியா பரவாமல் தடுக்கலாம். அப்படி துடைக்க சுத்தமான, உலர்ந்த அல்லது மென்மையான துண்டை பயன்படுத்துங்கள்.
உங்கள் யோனியை சுத்தம் செய்து துடைத்த பிறகு சுத்தமான உள்ளாடைகளை மாற்றவும். உடலுறவின் போது அணிந்த பழைய உள்ளாடைகளை அணிந்து கொள்வது அதிகப்படியான ஈரப்பதத்திற்கு வாய்ப்பளிக்கலாம். இதனால் ஈஸ்ட் தொற்று அல்லது சிறுநீர் பாதை தொற்று (urinary tract infection) ஏற்பட வாய்ப்பு உண்டாகும். நைலான் மாதிரியான துணிகளால் ஆன மிகவும் இறுக்கமான உள்ளாடைகளை பயன்படுத்த வேண்டாம். இது சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். பருத்தி போன்ற மென்மையான ஆடைகளை அணியுங்கள்.