Image: Getty Images
காதலர்களுக்கு விருப்பமான மாதம் பிப்ரவரி தான். இதில் தான் காதலர் தினம் உள்ளது. உலகம் முழுக்க வரும் பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாட்டத்தில் தான் மூழ்கி இருக்கும். ஒன்சைட் லவ் செய்யும் காதலர்கள் தங்கள் காதலை சொல்ல விதவிதமாக யோசித்து கொண்டிருப்பார்கள். ஏற்கனவே காதல் உறவில் இருப்பவர்கள் வித்தியாசமான பரிசுகளை கொடுத்து தங்கள் துணையை அசரடிப்பார்கள். ஆனால் காதலர் தினத்திற்கு முன்பு சில தினங்கள் வருகின்றன. அதில் ஒன்றுதான் ரோஸ் டே (Rose day). நாளை (பிப்ரவரி 7) ரோஸ் டே கொண்டாடப்படுகிறது. காதலர் தின வாரத்தின் முதல் நாள் இது.
'ரோஸ் டே' அன்று க்ரஷ் (crush) அல்லது உங்கள் நேசத்துக்கு உரிமையான துணைக்கு ரோஜா மலர்களை கொடுத்து அன்பை வெளிக்காட்டலம். 'ரோஸ் டே' பொறுத்தவரை இளஞ்சிவப்பு நிறம் மிகவும் முக்கியமானது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஒவ்வொரு வண்ண ரோஜாவும் ஒவ்வொரு அர்த்தங்களை குறிக்கிறது. காதலின் அடையாளமாக கருதப்படும் ரோஜாவில், நிறத்திற்கும் முக்கியத்துவம் உண்டு என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ற்படி ரோஜாவை கொடுத்தால் காதலியை/ காதலரை அசத்திவிடலாம் செய்யலாம். ரோஜாவை நீட்டி,"எத்தனையோ வண்ணம் இருந்தும் நான் ஏன் இந்த கலர் ரோஸ் கொடுத்தேன் தெரியுமா?" என ஆரம்பித்து மனதில் உள்ள உணர்வுகளை கொட்டிவிடுங்கள். உங்களுக்கு தேவையான வாழ்த்துகளும், டிப்ஸும் இதோ..!
ரெட் ரோஸ்
சிவப்பு வண்ணம் என்பது காதல், ஆர்வத்தை குறிக்கும். உங்கள் துணையை ஆழமாக காதலித்தால் இந்த சிவப்பு ரோஜாவை (red rose) கொடுங்கள். சிவப்பு ரோஜாக்களின் பூங்கொத்தை கொடுத்து புன்முறுவலோடு 'ஐ லவ் யூ' சொன்னால் நிச்சயம் அவர்களுக்கு பிடிக்கும்.
பிங்க் ரோஸ்
இளஞ்சிவப்பு ரோஜாக்கள் (pink roses) ரொம்ப ஸ்பெஷல். இது சிறப்பான நபர்களை பாராட்டும் விதமாக கொடுக்கப்படுவது. இவை பாராட்டின் அடையாளம். நீங்கள் மதிக்கும் மரியாதைக்குரிய நபருக்கு நண்பரோ, வழிகாட்டியோ அவருக்கு இளஞ்சிவப்பு ரோஜாவை கொடுக்கலாம். இளஞ்சிவப்பு ரோஜாவுடன் எந்த காதல் உணர்வுகளையும் குறிப்பதில்லை. அதனால் லவ்ருக்கு கொடுக்கவேண்டாம். ஆனால் உங்கள் துணைக்கு அந்த நிறம் விருப்பமாக இருந்தால் தாரளமாக கொடுக்கலாம்.
வெயிட் ரோஸ்
உங்களுடைய மதிப்புக்குரிய நபர் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க நீங்கள் ஆசைப்பட்டால், அவருக்கு ஒரு வெள்ளை ரோஜாவை (white rose) பரிசளிக்கலாம். மரியாதையை குறிக்கும் வண்ணமாக வெள்ளை உள்ளது. "உன்னை குறித்து நான் யோசிக்கிறேன்" என நீங்கள் அக்கறை காட்டும் நபருக்கு இந்த ரோஸ் கொடுக்கலாம்.
ஆரஞ்சு ரோஸ்
உற்சாகம், ஆர்வம், நன்றியுணர்வு ஆகியவற்றை தான் ஆரஞ்சு ரோஸ் குறிக்கும். உங்களுடைய என்ணங்களை யாருடன் பகிர விரும்புகிறீர்களோ, அவர்களுக்கு ஒரு கடிதத்துடன் ஆரஞ்சு ரோஜாவை வைத்து கொடுத்து நன்றி சொல்லலாம்.
Image: Getty Images
'ரோஸ் டே' வாழ்த்துகள்
ரோஸ் டே அன்று சிவப்பு ரோஜாவோடு காதலிக்கு/ காதலனுக்கு சொல்ல வாழ்த்துகள்..
"நிச்சயமில்லாத வாழ்வில் நாம் இணைந்திருக்கும் எல்லா கணங்களையும் நான் நேசிக்கிறேன். எந்த சூழ்நிலையிலும் நீ எனக்கு முக்கியம். உனக்கு ஆதரவாய் இருப்பேன். இனிய ரோஜா தின வாழ்த்துகள்"
நட்புக்கு வாழ்த்துகள்
"யார் யாரோ வரலாம்; போகலாம்... நீ என் நிரந்தரம். இனிய ரோஜா தின வாழ்த்துகள்"
இதையும் படிங்க: தாம்பத்தியம் முடிஞ்சாலும்.. பெண்கள் இதை செய்ய மறந்தால்.. ஆண்களுக்கும் ஆபத்து!!