
ஆரோக்கியமான சூழலில் தான் நாம் ஒவ்வொருவரும் வாழ விரும்புகிறோம். அந்த வகையில் அவ்வப்போது சுத்தம் செய்வது மிகவும் அவசியம். அதுவும் குறிப்பாக வீட்டை சுத்தமாக வைத்திருப்பதில் அடிப்படை விஷயங்களில் ஒன்றுதான் தரையை சுத்தமாக வைப்பது. தரையை சுத்தமாக வைத்திருந்தால் பார்ப்பதற்கு நேர்த்தியாகவும், சுகாதாரமாகவும் இருக்கும். முக்கியமாக சின்ன குழந்தைகள் இருக்கும் வீட்டின் தரையை அடிக்கடி சுத்தமாக வைத்துக் கொள்வது ரொம்பவே முக்கியம்.
ஆனால் சில சமயங்களில் நாம் எவ்வளவு தான் வீட்டை நன்கு சுத்தம் செய்தாலும் வீட்டில் தரை மட்டும் சீக்கிரமாகவே அழுக்காகி விடும். வீட்டின் தரை அழுக்காக இருந்தால் பாக்டீரியாக்கள் தங்கிவிடும். இதற்காக பலர் கடைகளில் கிடைக்கும் ரசாயனம் கலந்த ஃப்ளோர் கிளீனரை வாங்கி பயன்படுத்துவார்கள்.
ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு தரை சுத்தமாகாது. இத்தகைய சூழ்நிலையில், உங்கள் வீட்டின் தரையில் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்குகள், கறைகள் மற்றும் பாக்டீரியாக்களை நீங்க எந்தவித ரசாயனங்களுமின்றி, வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து தரையை சுலபமாக சுத்தம் செய்து விடலாம். அவை என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: வீட்டில் ஒட்டடை வராமல் இருக்கணுமா? தண்ணீருடன் இதை கலந்து ஒரு முறை பயன்படுத்தினால் போதும்!!
வீட்டின் தரையை சுத்தம் செய்ய சில டிப்ஸ்:
நீங்கள் உங்கள் வீட்டின் தரையை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தும் தண்ணீரில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில பொருட்களை மட்டும் கலந்து சுத்தம் செய்தால் போதும். அழுக்குகள், கறைகள் நீங்கி விடும். மற்றும் பாக்டீரியாக்களும் அழிந்து வீடு முழுவதும் வாசனை பரவும், தரையும் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும். அவை..
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான சுத்தப்படுத்தும் முகவராக செயல்படுகிறது. அதில் இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் பாக்டீரியாவை அழித்து தரையை திறம்பட சுத்தம் செய்ய பெரிதும் உதவுகின்றன. மேலும் தரையை வாசனையாக வைக்க உதவுகிறது. இதற்கு வீட்டை துடைக்க பயன்படுத்தும் அரை வாளி தண்ணீரில் 2 எலுமிச்சை பழ சாறு கலந்து துடைத்தால் போதும் வீடு வாசனையாக இருக்கும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா சமையலுக்கு மட்டுமின்றி வீட்டின் தரையை சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்தலாம். பேக்கிங் சோடாவை கொண்டு தரையை சுத்தப்படுத்தினால், தரையில் படிந்திருக்கும் எண்ணெய் மற்றும் கிரீஸ் கறைகளை சுலபமாக அகற்றி விடும், நல்ல வாசனையையும் தருகிறது மற்றும் தரை பளபளப்பாக இருக்க உதவுகிறது. இதற்கு அரைவாழியில் அரை கப் பேக்கிங் சோடா கலந்து பின் தரையை துடைக்க வேண்டும்.
வினிகர்
வினிகர் ஒரு இயற்கையான கிருமி நாசினி இது தரையை சுத்தப்படுத்த நமக்கு உதவும்.மேலும் இவற்றை பயன்படுத்துவதன் மூலம் வீடு வாசனையாகவும் இருக்கும். வினிகரை கொண்டு தரையை சுத்தம் செய்ய சூடான நீரில் சிறிதளவு வினிகர் கலந்து பின் துடைத்து எடுக்க வேண்டும்.
அத்தியாவாசிய எண்ணெய்கள்
புதினா மற்றும் எலுமிச்சை போன்ற அத்தியாவாசியை எண்ணெய்கள் கொண்டும் தரையை துடைக்கலாம் இதற்கு அரைவாழி தண்ணீரில் 5 முதல் 20 துளிகள் இந்த எண்ணையை கலந்து நன்கு துடைத்து எடுக்கவும் இதனால் தரையில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றனர் மற்றும் வீடு முழுவதும் நறுமணம் வீசும்.
நினைவில் கொள்:
சிலர் வீட்டின் தரையை துடைக்கும் போது அதிக முயற்சி எடுக்காமல், தண்ணீரை சரியாக பிழிந்து எடுக்காமல் ஏனோ தானோ என்று வேலை செய்வார்கள். இப்படி செய்தால் தூசி மற்றும் அழுக்குகள் தண்ணீர் மூலம் தரையில் அப்படியே ஒட்டிக் கொள்ளும். குறிப்பாக மரத்தாலான மற்றும் லேமினேட் தரை அமைப்பு உள்ளவர்கள் இந்த தவறை செய்யவே கூடாது. இல்லையெனில் அதில் கறைகள் படிந்து விடும்.
நீங்கள் உங்கள் வீட்டின் தரையை ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்த பிறகு, சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் துடைப்பானை நன்கு கழுவி வெயிலில் காய வைத்து பயன்படுத்தவும். இல்லையெனில், அவை மூலம் பாக்டீரியாக்கள் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதையும் படிங்க: பேக்கிங் சோடாவை 1 ஸ்பூன் 'இப்படி' பயன்படுத்தினால் மொத்த வீட்டையும் பளீச்னு சுத்தம் பண்ணிடலாம்!!