
அதிகரித்து காணப்படும் உடல் எடையை எப்படியாவது குறைத்து கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் எல்லா வகையான டயட்களையும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் டயட்டில் இருக்கும் போது நாம் செய்யும் சின்ன தவறுகள் எடையை குறைக்க முடியாமல் போகின்றது. அந்த தவறுகள் என்னை என்று கண்டறிந்து அவற்றிற்கு மாறாக செயல்பட்டால் உடல் எடையை சுலபமாக குறைத்து விடலாம்.
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை விரைவில் குறைக்கலாம். ஆனால் சில வகையான உணவுகள் உங்களில் எடையை அதிகரிக்கச் செய்யும் தெரியுமா? அந்த மாதிரியான உணவுகளை ஒருபோதும் சாப்பிட வேண்டாம். அது என்ன உணவுகள் என்று இங்கு பார்க்கலாம்.
உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் 5 உணவுகள் :
1. குப்பை உணவுகள்
சிப்ஸ், குக்கீஸ், ஃபர்ஸ்ட் ஃபுட் இவற்றிலிருந்து விலகி இருக்காமல் இருந்தால், உடல் எடை அதிகரிப்பது உறுதி ஏனெனில் இந்த மாதிரியான உணவுகளில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளது. சர்க்கரையும் உள்ளன. இவை அனைத்தும் நேரடியாக உடல் எடை அதிகரிப்புக்கு வழி வகுக்கும்.
ஆய்வின்படி, மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது உருளைக்கிழங்கு சிப்ஸ் அதிக எடைக்கு காரணமாகின்றன. எனவே இவற்றை உண்பதை தவிர்ப்பது நல்லது.
2. குளிர் பானங்கள்
சர்க்கரை பானங்கள் குறிப்பாக சோடாக்கள் உடல் எடையை அதிகரிக்க செய்யுமாம். ஆய்வு ஒன்றின் படி, குளிர்பானங்கள் எடை அதிகரிப்பதில் குறிப்பிடுத்தக்க பங்கு வகிக்கின்றது. இவை பசியை போக்காது. ஆனால் கலோரிகளை அதிகரிக்கச் செய்யும். இது தவிர சர்க்கரை சேர்க்கப்பட்ட பழ சாறுகள் குடிப்பது நல்லதல்ல. எனவே பழங்களில் ஜூஸ் போட்டு குடிப்பதற்கு பதிலாக அதை அப்படியே சாப்பிடுவது நல்லது.
3. வறுத்த உணவுகள்
பிரெஞ்சு பொரியல், வறுத்த கோழி அல்லது பிறவறுத்த உணவுகளில் கலோரிகள் அதிகமாக உள்ளது.மேலும் இதில் அதிக அளவு ஆரோக்கியமற்றுக்கும் உள்ளன. இவை அனைத்தும் உடல் எடையை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் மற்றும் இவை ஆரோக்கியமற்றது. ஆய்வு ஒன்றின் படி, பிரெஞ்சு பொரியல் மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் இவை இரண்டிலும் அதிக அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புகள் இருப்பதால், இவை உடல் எடையை அதிகரிப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
4. ரொட்டி பாஸ்தா
இவை இரண்டும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் இவற்றில் சர்க்கரையும் அதிகமாக உள்ளது. ஆய்வின்படி ஒரு நாளைக்கு இரண்டு ரொட்டிக்கு மேல் சாப்பிட்டால் அது எடையை அதிகரிக்க செய்யும். பதப்படுத்தப்பட்ட கார்கோஹைட்ரேட்டுகளும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யலாம். எனவே இந்த மாதிரியான உணவுகளுக்கு பதிலாக நார்ச்சத்து நிறைந்த பதப்படுத்தப்படாத தானிய வகை உணவுகளை சாப்பிடுவது நல்லது.
5. அதிக கொழுப்பு உணவுகள்
எண்ணெயில் பொரித்த இரட்சிகள் மற்றும் பிற உணவுகளில் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் கலோரிகள் அதிகமாக காணப்படும். இது எடை இழப்பு செயல்முறையை மேலும் தாமதப்படுத்தும். ஒரு அறிக்கையின் படி, எடை அதிகரிப்பதற்கும் பொரித்த இறைச்சி சாப்பிடுவதற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சாப்பிடாம இருந்தா தான் எடை குறையுமா? இதை தினமும் குடிச்சாலே உடல் எடை குறையும்: டிரை பண்ணி பாருங்க
உடல் எடையை குறைக்க பின்பற்ற வேண்டியவை :
உடல் எடையை குறைக்க விரும்புவோர் உடற்பயிற்சிகளை அதிகம் ஈடுபட வேண்டும். இது தவிர மிகவும் முக்கியமானது ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும். அதுவும் குறிப்பாக நீங்க சாப்பிடும் உணவில் கலோரிகளின் அளவை அவ்வப்போது பார்க்கவும்.
தினமும் சாப்பிடும் உணவில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து இருக்க வேண்டும். அதுபோல முழு தானியங்கள், கொழுப்பு குறைவாக இருக்கும் இறைச்சிகள், பருப்புகள், விதைகள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
இதையும் படிங்க: தண்ணீர் குறைவாக குடித்தால் உடல் எடை அதிகரிக்குமா? நிபுணர்கள் பதில்!