
குறட்டை என்பது ஒருவர் தூங்கும் போது நடக்கும் ஒரு இயல்பான விஷயமாகும். ஒருவர் குறட்டை விடும் போது அவருக்கு அருகில் இருப்பவர்களுக்கு இந்த சத்தம் எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் அவர்கள் தூங்குவதற்கு சிரமமாக உணர்வார்கள். சில சமயங்களில் அவர்களால் இரவு முழுவதும் தூங்கு கூட முடியாது.
குறட்டை விடுவது சில சமயங்களில் தீவிரமான உடல்நல பிரச்சனையாக இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். எனவே குறட்டை வருவதற்கான காரணம் மற்றும் அதை நிறுத்து எப்படி என்று இங்கு தெரிந்துகொள்ளலாம்.
குறட்டை வர காரணம்:
நாம் தூங்கும் போது நமது தொண்டை மற்றும் நாக்கு பகுதியில் உள்ள தசைகளானது தளர்வடையும். அந்த சமயத்தில் காற்றானது தொண்டை பலியாக உள்ளே செல்லும்போது சுவாச பாதையானது சுருங்கி இருப்பதால் தொண்டையில் உள்ள தளர்வான திசுக்கள் அதிர்வடையும் இந்த அதிர்வு தான் குறட்டை சத்தத்தை எழுப்புகிறது.
குறட்டை அருகில் இருப்பவர்களுக்கு அதிக தொல்லையை கொடுக்கலாம், தூக்கத்தை சீர்குலைக்கலாம். ஆனால் இது புறக்கணிக்க வேண்டிய அறிகுறி அல்ல. ஏனெனில் இது தூக்கத்தில் மூச்சு திணறல் ஏற்படுவதால் கூட நிகழலாம். இது தவிர உடல் பருமன், வாய், மூக்கு, தொண்டை அமைப்பில் உள்ள சிக்கல், மது அருந்துவது, மல்லாந்து படுத்து தூங்குவது, தொண்டை அல்லது கழுத்து பகுதியில் அதிக எடை போன்றவை குறட்டை வருவதற்கான பொதுவான காரணங்கள் ஆகும்.
உங்களுக்கு தெரியுமா பெண்களை விட ஆண்கள் தான் குறட்டை அதிகமாக வருமாம். சரி இப்போது குறட்டை விடுவதை தடுக்கும் வழிகள் பற்றி பார்க்கலாம். அவை..
குறட்டை விடுவதை தடுக்க 5 வழிகள் :
1. ஒரு பக்கமாக சாய்ந்து தூங்கு
ஸ்லீப் பவுண்டேஷன் கூற்றுப்படி, நாம் நேராக படுத்தால் குறட்டை விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாம். காரணம், நேராக படுத்து தூங்கும்போது சுவாசப்பாதைகள் அதிகமாகவே சுருங்கும். எனவே நேராக படுத்து தூங்குவதற்கு பதிலாக ஒரு பக்கமாக சாய்ந்து தூங்கினால் குறட்டை விடுவதற்கான வாய்ப்புகள் குறையும்.
2. போதுமான அளவு தூக்கம் அவசியம்
அமெரிக்கன் அகாடமி ஆப் ஸ்லீப் மெடிசன் கூற்றுப்படி, நாம் தினமும் 7 முதல் 9 மணி வரை கண்டிப்பாக தூங்க வேண்டும். ஒருவேளை நாம் சரியாக தூங்கவில்லை என்றால் குறட்டை வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
3. மூக்கை சுத்தமாக வை
சளி மூக்கடைப்பு போன்றவற்றால் கூட மூக்கடைப்பு ஏற்பட்டு குறட்டை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே உப்பு நீர் மூலம் நாசி துவாரங்களை நன்றாக சுத்தம் செய்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
4. அளவோடு சாப்பிடு
இரவு தூங்கும் முன் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் செரிமானத்தில் பிரச்சனையை ஏற்படுத்துவது மட்டுமின்றி குறட்டை வரும். அதுபோல நீங்கள் படுக்கைக்கு செல்வதற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு முன் உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதுபோல பால், சோயா பால் போன்றவை இரவு தூங்கும் முன் குடிப்பது குறட்டையை மேலும் மோசமாக்கும் என்று ஒரு ஆய்வு சொல்லுகிறது.
இதையும் படிங்க: குறட்டை விவாகரத்து மட்டுமல்ல மரணத்தையும் ஏற்படுத்துமாம்..! ஜாக்கிரதை..!!
5. எடையை குறைக்கவும்
அதிக உடல் எடை உங்களது ஒட்டுமொத்த நல்வாழ்வையும் கெடுக்கும் மற்றும் குறட்டையை ஏற்படுத்தும். இதனால் தூக்கம் கெடும். உடல் எடை அதிகமாக இருந்தால் குறட்டை கண்டிப்பாக வருவதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது குறிப்பாக கழுத்துப் பகுதியில் இருக்கும் கொழுப்பு குறட்டை விடுவதற்கான முக்கிய காரணமாகும். எனவே ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கவும். மேலும் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உடல் எடையை குறைப்பதன் மூலம் குறட்டை பிரச்சனை ஒரேடியாக நின்று விடும்.
இதையும் படிங்க: பெண்களுக்கு ஏற்படும் குறட்டை பிரச்சனை.. காரணங்கள் இவையே..!