சுரைக்காயில் தண்ணீர் அதிகமாக உள்ளது. இதன் சாற்றை வெறும் வயிற்றில் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாது. சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் 1 மாதம் குடித்து வந்தால் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கலாம். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் கே, இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இத்தனை உடல்நலப் பிரச்சனைகள் மட்டுமல்ல... சருமத்தை இளமையாகக் காட்டவும், சருமத்தை மினுமினுக்கச் செய்யவும் உதவுகிறது.