Peanut Allergy In Tamil
இட்லி, தோசை, போண்டா, வடை என ஒவ்வொரு டிபனுக்கும் வேர்க்கடலை வைத்து சட்னி செய்வது வழக்கம். இந்த சட்னி சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். வேர்க்கடலையில் சட்னி மட்டுமின்றி, ஸ்நாக்ஸ், கிரேவி போன்றவை கூட வைக்கலாம். வேர்க்கடலையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் அதிகம் உள்ளன. இவை அனைத்தும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல விதமான நன்மைகளை வாரி வழங்குகின்றது.
வேர்க்கடலை நமது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை செய்தாலும், ஒரு குறிப்பிட்ட நபர்கள் இதைச் சாப்பிடவே கூடாதாம். மீறினால் நன்மைக்கு பதிலாக தீமை தான் வரும். எனவே வேர்க்கடலையை யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்
Peanut Allergy In Tamil
வேர்க்கடலையை யார் சாப்பிடக்கூடாது?
அசிடிட்டி
இன்றைய காலகட்டத்தில் பலர் வாயு, அசிடிட்டி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர். ஆனால் இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் வேர்க்கடலையைத் தொடவே கூடாது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் இவர்கள் வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை அதிகரிக்கும். அதேபோல் வேர்க்கடலை வாயு, அசிடிட்டி, வயிற்று வலி, அஜீரணம், வயிற்றுப்போக்கு போன்ற வயிற்றுப் பிரச்சனைகளை அதிகரிக்கும்.
யூரிக் அமிலம்
வேர்க்கடலையில் புரதச்சத்து அதிகம் உள்ளது. இது நமது உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கிறது. இந்நிலையில், உங்களுக்கு ஏற்கனவே மூட்டு வலி, முழங்கால் வலி அல்லது ஹைப்பர்யூரிசிமியா போன்ற பிரச்சனைகள் இருந்தால், வேர்க்கடலையை அதிகமாக சாப்பிடக்கூடாது. ஏனெனில் வேர்க்கடலை சாப்பிட்டால் நிலைமை மோசமாகும்.
உயர் ரத்த அழுத்தம்
உயர் ரத்த அழுத்தம் என்பது அலட்சியம் செய்ய வேண்டிய விஷயம் அல்ல. இந்தக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் வேர்க்கடலை சாப்பிடக்கூடாது. ஏனெனில் வேர்க்கடலையை சுவையாக மாற்ற மக்கள் அதிக சோடியத்தைச் சேர்க்கிறார்கள். உப்பு சேர்த்து வறுத்த வேர்க்கடலை அல்லது வேர்க்கடலை வெண்ணெய் சாப்பிட்டாலும் உங்கள் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நீங்கள் வேர்க்கடலை சாப்பிட விரும்பினால், உப்பு சேர்க்காமல் சாப்பிட முயற்சிக்கவும்.
Peanut Allergy In Tamil
உடலில் வீக்கம்
வேர்க்கடலையில் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. ஆனால் ஒமேகா -3 இல்லை. எனவே இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதாவது, இந்த நிறைவுறா கொழுப்பு அமிலங்களின் ஏற்றத்தாழ்வு உங்கள் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
தாது உறிஞ்சுதல்
வேர்க்கடலை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவினாலும், இது உங்கள் உடலில் தாது உறிஞ்சுதலைத் தடுக்கலாம். வேர்க்கடலையில் உள்ள கால்சியம், பைடிக் அமிலம், இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம் ஆகியவற்றின் உறிஞ்சுதலைத் தடுக்கிறது. இதனால் பைட்டேட்டுகள் கனிமக் குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன. மேலும், இரைப்பைக் குழாயில் ஒவ்வாமை, எரிச்சல் போன்ற பிரச்சனைகளும் வரலாம்.
எடை இழப்பு
எடை இழக்க விரும்புபவர்கள் வேர்க்கடலையைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் வேர்க்கடலையில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளன. இது உங்கள் எடையை அதிகரிக்கிறது. எனவே எடை இழக்க விரும்பினால் வேர்க்கடலையைத் தவிர்க்கவும்.
ஒவ்வாமை
பலருக்கு வேர்க்கடலை ஒவ்வாமை உள்ளது. இவர்கள் தற்செயலாக வேர்க்கடலையைச் சாப்பிட்டால், உடல் அரிப்பு, அரிப்பு, வீக்கம், மூச்சுத் திணறல், அனாபிலாக்ஸிஸ் போன்ற பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். உங்களுக்கும் வேர்க்கடலை ஒவ்வாமை இருந்தால், அதைத் தவிர்க்கவும்.
Peanut Allergy In Tamil
வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது: AHA ஜேர்னலில் வெளியான ஒரு அறிக்கையின்படி, வேர்க்கடலையை அளவாகச் சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும். இதனால் உங்கள் இதய ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதுமட்டுமின்றி, இது உங்கள் உடலில் உள்ள இரத்த அழுத்த அளவையும் குறைக்கிறது. வேர்க்கடலையில் நார்ச்சத்து, மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் புரதம் அதிகம் உள்ளது. அதனால்தான் இது இதயத்திற்கு நல்லது என்று சொல்கிறார்கள்.
நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது: வேர்க்கடலை நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும் கெட்ட கொழுப்பும் இல்லை. இவற்றைச் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியம் இன்சுலின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் தினமும் ஒரு கொத்து 'இத' சாப்பிடுங்க...குளிர் உங்களை அண்டாது!
Peanut Allergy In Tamil
பல வகையான புற்றுநோய்களைத் தடுக்கிறது: வேர்க்கடலை சாப்பிடுவது சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வேர்க்கடலையில் நல்ல அளவு வைட்டமின் ஈ மற்றும் புரதம் உள்ளது. அதுமட்டுமின்றி, வேர்க்கடலையில் ரெஸ்வெராட்ரോலும் அதிகம் உள்ளது. இது ஒரு பாலிபினாலிக் ஆக்ஸிஜனேற்றி என்பதால், இது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
எடை இழப்புக்கு உதவுகிறது: வேர்க்கடலை எடை இழப்புக்கும் உதவும். இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் எடை இழக்க உதவுகிறது. வேர்க்கடலை சாப்பிடுவது உங்கள் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. மேலும் பசி கட்டுப்பாட்டில் இருக்கும்.
இதையும் படிங்க: மதுபான கடைகளில் உப்பு வேர்க்கடலை சைடிஷாக கொடுக்க இப்படி ஒரு காரணமா?