உப்பு கறை படிந்த பாத்ரூம் குழாய்களை இப்படி க்ளீன் பண்ணி பாருங்க! புதுசு போல் மாறிடும்!

First Published | Oct 4, 2024, 2:43 PM IST

குளியலறை குழாய்களில் படிந்திருக்கும் விடாப்பிடியான கறையை எலுமிச்சை சாறு, பற்பசை, வினிகர், பேக்கிங் சோடா போன்ற எளிய பொருட்களைப் பயன்படுத்தி எளிதாக நீக்கலாம்.

நம் குளியலறைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பாகங்களில் குழாய்களும் ஒன்றாகும். இந்த குழாய்களை தொடர்ந்து சுத்தம் செய்தாலும், காலப்போக்கில், இந்த குழாய்களின் மேற்பரப்பில் உப்பு நீர் படிய தொடங்குவதால் குழாய்கள் அழுக்கு படிந்து தொடங்குகிறது.

இதனால் பாத்ரூமில் இருக்கும் குழாய்கள் பழையதாகவும், அழுக்குப்படிந்தும் காணப்படுகின்றன. நாளடைவில் விடாப்பிடியான கரையாக மாறிவிடும். பாத்ரூம் குழாய்களில் இருக்கும் விடாப்பிடியான கரையை போக்க உதவும் சில டிப்ஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

எலுமிச்சை சாறு: ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிது சோப்பு பவுடர் சேர்த்து, அதில் எலுமிச்சை சாற்றை பிழியவும். நன்றாக கலக்கவும். பின்னர் இந்த கலவையை உப்புக்கறை படிந்த குழாயில் சிறிது தடவவும். இப்போது ஸ்க்ரப்பரால் தேய்க்கவும். ஐந்து நிமிடம் தண்ணீர் ஊற்றி கழுவினால் விடாப்பிடியான கறை நீங்கி பளிச்சென மாறும்.

பற்பசை: பல் துலக்குவதற்கு நாம் தினமும் பயன்படுத்தும் பற்பசையைக் கொண்டு குழாய்களைச் சுத்தம் செய்யலாம்.. முதலில் ஒரு பழைய பிரஷில் சிறிது பேஸ்ட்டை தடவி அழுக்கு குழாய்களை நன்றாக தேய்க்கவும். பத்து நிமிடம் கழித்து தண்ணீரில் சுத்தம் செய்தால் போதும். இவ்வாறு செய்வதன் மூலம் குழாய்களில் உள்ள பிடிவாதமான கறைகள் நீங்கும்.

Tap to resize

வினிகர்: ஒரு பாத்திரத்தில் சிறிது வினிகரை எடுத்து அதில் சிறிது தண்ணீர் சேர்க்கவும். பிறகு அதில் ஒரு ஸ்பாஞ்ச் அல்லது ஸ்க்ரப்பர் சேர்த்து.. 5 நிமிடம் அப்படியே விடவும். இப்போது அழுக்கான குழாய்களை ஸ்க்ரப்பரால் நன்கு தேய்க்கவும். ஐந்து நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும். வாரம் ஒருமுறை இப்படிச் சுத்தம் செய்வது குழாய்களை புதியது போல் பளிச்சென்று மாறும். .

bathroom vastu tips

சமையல் சோடா, எலுமிச்சை சாறு: முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து அதில் ஒரு எலுமிச்சையை பிழியவும். இந்த கலவையை நன்றாக கலக்கவும். பிறகு இந்தக் கலவையை உப்புக்கறை படிந்த குழாய்கள் மீது சிறிதளவு போட்டு எலுமிச்சையுடன் தேய்க்கவும். இப்படி செய்தால் குழாய்களை எளிதாக சுத்தம் செய்யலாம். இந்த சிறிய குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குழாய்களை எளிதாக சுத்தம் செய்யலாம்.

உப்புக்கறை படிந்த குழாய்களை நன்றாக சுத்தம் செய்ய, நீங்கள் பாத்திரங்களைக் கழுவும் சோப்பைப் பயன்படுத்தலாம். டிஷ் சோப்பை வெதுவெதுப்பான நீரில் கலக்கவும். இந்த கலவையில் ஒரு பஞ்சை நனைத்து குளியலறை குழாய்களை சுத்தம் செய்யவும். உங்கள் குழாய் பளிச்சென மாறும்

bathroom vastu tips

எலுமிச்சையில் உள்ள அமிலம், பிடிவாதமான கறை மற்றும் குளியலறை குழாய்களில் உள்ள சுண்ணாம்பு படிவதை அகற்ற உதவுகிறது. நீங்கள் ஒரு ஸ்க்ரப் பேடில் சிறிது எலுமிச்சை சாற்றை ஊற்றி குளியலறை குழாய்களை சுத்தம் செய்ய பயன்படுத்த வேண்டும். நீங்கள் நேரடியாக பாத்ரூம் குழாயின் மேல் பாதி எலுமிச்சை பழத்தை உபயோகித்து, சில நிமிடங்கள் வைத்திருந்து பிறகு தண்ணீர் ஊற்றி கழுவலாம்.

Latest Videos

click me!