- பப்பாளி பழத்தில் இருக்கும் பைப்பேன் மற்றும் நார்ச்சத்து செரிமான செயல்முறையை சிறப்பாக செய்யும்.
- பப்பாளியில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்தும் நிறைந்துள்ளதால் இது வயிறை நிரப்பிய உணர்வை கொடுத்து, கொழுப்பை எரித்து உடல் எடையை கட்டுக்குள் வைக்கும்.
- பப்பாளி பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும் மற்றும் வயிற்றை சுத்தமாக வைக்கும்.
- பப்பாளியில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் இது வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்கும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும்.
- பப்பாளி பழத்தில் இருக்கும் வைட்டமின் ஏ சருமத்தை உள்ளிருந்து ஊட்டமளித்து பளபளக்க செய்யும் மற்றும் தலைமுடி வளர்ச்சிக்கும் மிகவும் நன்மை பயக்கும்.