Water Bottle: வாட்டர் பாட்டில் அடியில் படிந்த அழுக்குகள்.. அரிசியை வைத்து ஈஸியா க்ளீன் பண்ணலாம்

Published : Jul 24, 2025, 03:38 PM IST

வாட்டர் பாட்டில்களின் அடிப்பகுதியில் அழுக்குகள் தேங்குவது சகஜம்தான். ஆனால் அதை சுத்தப்படுத்துவது என்பது சற்று சிரமமான காரியம். இந்த பதிவில் வாட்டர் பாட்டிலின் அடிப்பகுதியை எளிதான முறையில் சுத்தம் செய்யும் முறைகள் குறித்து பார்க்கலாம். 

PREV
15
வாட்டர் பாட்டில்களை சுத்தம் செய்யும் முறைகள்

நமது அன்றாட பயன்பாட்டில் உள்ள ஒரு பொருள்தான் தண்ணீர் பாட்டில். ஆனால் தினமும் இந்த பாட்டிலை பயன்படுத்தும் பொழுது அடியில் அழுக்குகள் படிந்துவிடும். இந்த அழுக்குகள் நாளடைவில் கடும் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எவ்வளவு கழிவினாலும் அந்த அழுக்குகளையும், துர்நாற்றத்தையும் நீக்க முடியாது. ஆனால் இதை எளிதாக நீக்குவதற்கு எளிய முறை ஒன்று உள்ளது. இந்த முறையில் கழுவினால் பாட்டில்களில் அடியின் படிந்துள்ள அழுக்குகள் சுத்தமாவதுடன், புத்துணர்ச்சியான வாசத்தையும் பெறமுடியும். அதை எவ்வாறு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

25
தேவையானப் பொருட்கள்
  • அரிசி - ஒரு ஸ்பூன்,
  • உப்பு - ஒரு ஸ்பூன்,
  • எலுமிச்சை சாறு - சிறிதளவு
  • சுடுதண்ணீர் - தேவையான அளவு
     

முதலில் தண்ணீர் பாட்டிலில் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் அரிசியை சேர்க்கவும். உப்பு கறைகளை நீக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. அரிசி ஒரு உராய்வு பொருளாக செயல்பட்டு அழுக்குகளை நீக்கும். இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை பாட்டிலில் பிழியவேண்டும் எலுமிச்சை சாறு துர்நாற்றத்தை நீக்குவதுடன், புத்துணர்ச்சி வாசத்தை ஏற்படுத்தும். தற்போது பாட்டிலின் பாதி அளவிற்கு மிதமான சூடாக உள்ள தண்ணீரை ஊற்ற வேண்டும். தண்ணீர் அதிக சூடாக இருக்கக் கூடாது. பின்னர் பாட்டிலை நன்றாக மூடிவிட்டு சுமார் இரண்டு நிமிடங்கள் நன்றாக குலுக்க வேண்டும். பாட்டிலுக்குள் இருக்கும் பொருட்கள் அசைந்து உட்புற சுவர்களில் உள்ள அழுக்குகள் சுத்தம் செய்யப்படும்.

35
வாட்டர் பாட்டில்களை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்

பின்னர் பாட்டிலில் உள்ள கலவையை ஊற்றிவிட்டு, சுத்தமான தண்ணீரில் ஒரு முறை அலச வேண்டும். தேவைப்படுபவர்கள் சோப்பு கலவை கொண்டு அடிப்பகுதியை ஒரு பிரஷ் கொண்டு சுத்தம் செய்யலாம். இப்போது தண்ணீர் பாட்டிலின் அடியில் படிந்திருந்த அனைத்து அழுக்குகளும் நீங்கி, பாட்டில் பளிச்சென்று இருக்கும். துர்நாற்றமும் நீங்கி எலுமிச்சையின் புத்துணர்ச்சியான வாசனையுடன் விளங்கும். இந்த முறையை நீங்கள் ஸ்டீல் பாட்டில்களில் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பாட்டில்களில் சூடான தண்ணீர் ஊற்றுதல் கூடாது. வாட்டர் பாட்டிலை தினமும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். குழந்தைகளுக்கு பள்ளிகளுக்கு கொடுத்து அனுப்பும் பாட்டில்களை தினமும் கழுவுவது அவர்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவும்.

45
பாட்டில்களை சுத்தம் செய்யும் பிற முறைகள்

வாட்டர் பாட்டில்களை மேலும் சில முறைகளிலும் சுத்தம் செய்யலாம். பாட்டிலில் வெதுவெதுப்பான நீர் மற்றும் சில துளிகள் டிஷ்வாஷ் சோப்பை சேர்க்க வேண்டும். பாட்டிலின் மூடியை மூடி நன்கு குலுக்க வேண்டும். பின்னர் பாட்டிலை பிரஷ்ஷால் தேய்த்து கழுவினால் பாட்டில் சுத்தமாகும். இந்த முறையை தினமும் பயன்படுத்தலாம். கறைகள் ஆழமாக படிந்து இருந்தால் கால் கப் வெள்ளை வினிகர் மற்றும் ஒரு கைப்பிடி சமைக்காத அரிசியை சேர்த்து நன்கு குலுக்க வேண்டும். இந்த முறையில் நல்ல கடினமான கறைகள் நீக்கப்படும். பாட்டில் மிகவும் துர்நாற்றத்துடன் இருந்தால் பேக்கிங் சோடா 1/4 கப் சேர்த்து சூடான நீர் சேர்த்து நன்கு குலுக்கி இரவு முழுவதும் ஊறவிட்டு மறுநாள் காலை பிரஷ் கொண்டு தேய்த்து அலசினால் பாட்டிலில் உள்ள துர்நாற்றம் நீங்கும்.

55
வாட்டர் பாட்டில்களை பராமரிக்கும் முறைகள்

ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும் பாட்டிலை கழுவுவது அழுக்குகள் படிவதை தடுக்கும். நன்கு கழுவிய பிறகு பாட்டிலை தலைகீழாக வைத்து முழுமையாக உலர விட வேண்டும். ஈரப்பதம் பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். பாட்டிலின் வாய் பகுதியையும், மூடியையும் மறக்காமல் சுத்தம் செய்ய வேண்டும். சிறிய பிரஷ்கள் மற்றும் காட்டன் ஸ்வாப்புகளை பயன்படுத்தி இதை சுத்தம் செய்யலாம். பிளாஸ்டிக் பாட்டில்கள் காலப்போக்கில் கீறல் விழுந்து அதன் பாக்டீரியாக்கள் படிய வாய்ப்புள்ளது. எனவே பழைய மற்றும் கீறல் விழுந்த பிளாஸ்டிக் பாட்டில்களை மாற்ற வேண்டும். இந்த முறைகளை பின்பற்றி உங்கள் வாட்டர் பாட்டில்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories