வெறும் கல் உப்பு போதும்! மழுங்கிப்போன கத்தியை நொடியில் கூர்மையாக்கும்

Published : Jul 24, 2025, 12:38 PM IST

உங்கள் வீட்டில் இருக்கும் மழுங்கிப் போன கத்தியை ஷார்பாக மாத்துவது எப்படினு இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
18
How to Sharpen Kitchen Knives

முந்தைய காலத்தில் வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒரு முறை கத்தி சாணை பிடிப்பவர்கள் அந்த மிஷினோடு சாணை பிடிக்கலையோ கூவிக்கொண்டு வருவார்கள். ஆனால் இந்த காலத்தில் அப்படி வருவதில்லை. இதனால் கத்தி மழுங்கி விட்டால் உடனே அதை குப்பையில் போட்டுவிட்டு புது கத்தி வாங்கிக் கொள்கிறோம். ஆனால் இனி அப்படி தூக்கிப் போட அவசியம் இல்லை. ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் இரண்டே நிமிடத்தில் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து மழுங்கிப் போன கத்தி மற்றும் கத்தரிக்கோலை ஷார்ப்பாக மாற்றிடலாம். அது எப்படி என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

28
மாத்திரை கவர் :

இதற்கு அடுப்பை பற்ற வைத்து அதில் மால் இங்கு போன கத்தரிக்கோல் மற்றும் கத்தியை சுமார் 20 நிமிடங்கள். சூடாக்கவும் பிறகு மாத்திரை இருக்கும் செல்வ நிற அட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அந்த அட்டையை சின்ன சின்ன துண்டுகளாக கத்தியால் வெட்டுங்கள். அலுமினிய தகட்டை வெட்டும் போது கத்தியானது ஷார்ப்பாகிவிடும். பிறகு அதே அட்டையை கத்தியின் வெட்டும் பகுதியில் இரண்டு புறமும் நன்றாக தேய்த்தால் போதும் கத்தி ரொம்பவே ஷார்ப்பாகிவிடும்.

இதுபோல டீ குடிக்கும் செராமிக் கப்பை தலைகீழாக கவிழ்த்து அதன் பின்புறத்தில் நெருப்பில் காட்டிய கத்தியை இரண்டு புறமும் வைத்து லேசாக தீட்டினால் மழுங்கி போன கத்தி ஷார்பாகிவிடும்.

38
கண்ணாடி பாட்டில்:

இதற்கு ஒரு கண்ணாடி பாட்டிலில் கண்ணாடியின் கழுத்துப் பகுதியை பேப்பர் வெட்டுவது போல திரும்பத் திரும்ப செய்து கொண்டே இருந்தால் ஐந்தே நிமிடத்திலேயே கத்தரிக்கோல் மற்றும் கத்தி ஷார்பாகிவிடும்.

48
எலுமிச்சை

ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டாக நறுக்கி அதன் ஒரு பகுதியை கத்தி மற்றும் கத்தரிக்கோலில் நன்றாக தேய்க்க வேண்டும். எலுமிச்சையில் இருக்கும் அமலத்தன்மை கத்தியை ரொம்பவே கூர்மையாக மாற்றிவிடும்.

58
கல் உப்பு

ஒரு கிண்ணம் நிறைய கல் உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு துணியை வெட்டுவது போல உப்பை வெட்டுங்கள். இப்படி செய்தால் கத்திரிக்கோல் கூர்மையாகிவிடும் கத்தியும் கூட.

68
அலுமினிய ஃபாயில் பேப்பர்

சிறிதளவு அலுமிய ஃபாயில் பேப்பரை உங்கள் கைகளால் நன்றாக நசுக்கி உருண்டையாக பிடித்துக் கொள்ளுங்கள். இப்போது அதன் உள்ளே மல்லுங்கிப் போன கத்தி மற்றும் கத்திரிக்கோலை சொருகி நன்றாக தேய்க்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் அப்படியே தைக்க வேண்டும். பிறகு பார்த்தால் ஷார்பாக மாறி இருக்கும்.

78
உப்பு தாள்

உப்புத்தாள் கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி, கத்தி மற்றும் கத்திரிக்கோலால் சின்ன சின்ன துண்டுகளாக வெட்டுங்கள். இப்படி செய்தால் அதை கூர்மையாகும் அடுத்ததாக சிறிதளவு உப்பு காகிதத்தை கொண்டு கத்தி மற்றும் கத்தரிக்கோலில் வெட்டும் பகுதியில் சுமார் 5 நிமிடங்கள் வரை நன்கு தேய்த்தால் கத்தி பளபளவென்று புதியது போல மாறிவிடும் மற்றும் கூர்மையாகும்.

88
முட்டை ஓடு

முட்டை ஓட்டை கத்தரிக்கோலால் சின்ன சின்ன துண்டுகளாக வெட்டுங்கள். அதுபோல முட்டை ஓட்டை கொண்டு மழுங்கி போன கத்தி மீது நன்றாக தேய்க்க வேண்டும். இப்படி இரண்டு நிமிடங்கள் தொடர்ந்து செய்தால் போதும், கத்தி கூர்மையாகிவிடும்.

Read more Photos on
click me!

Recommended Stories