பற்களை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டை நீங்கள் அதிகமாக பயன்படுத்தினால் வாயில் பல பாதிப்புகள் ஏற்படும். அவை என்னென்ன என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
உங்களது பற்கள் மற்றும் வாயு ஆரோக்கியம் நன்றாக இருக்க தினமும் ஒரு நாளைக்கு காலை மற்றும் இரவு உணவுகு பிறகு என இரண்டு முறை பல் துலக்குங்கள். இதனால் பற்கள் பளபளப்பாகவும், வாய் துர்நாற்றம் இல்லாமல் இருக்கும். ஆனால் நம்மில் பலர் பல் துலக்குவதற்கு அதிகமாக டூத் பேஸ்ட் பயன்படுத்துகிறார்கள். இதனால் வாயில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதிகமாக டூத் பேஸ்ட் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் ஒரு நாளைக்கு எவ்வளவு டூத் பேஸ்ட் பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
24
அதிகமாக டூத் பேஸ்ட் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் :
டூத் பேஸ்ட்டில் இருக்கும் சோடியம் ஃப்ளோரைடு என்ற பொருள் பற்களை வலுப்படுத்த தான் உதவுகிறது ஆனால் அளவுக்கு அதிகமாக டூத் பேஸ்ட் பயன்படுத்தினால் இது வாய்வழி ஆரோக்கியத்தை மோசமடைய செய்யும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும் டூத் பேஸ்ட் அதிகமாக பயன்படுத்தினால் பற்களில் துவாரங்கள், பல் கூச்சம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த காரணத்தினால் தான் டூத் பேஸ்ட்டை அதிகமாக பயன்படுத்தக் கூடாது, குறைந்த அளவில்தான் பயன்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
34
நிபுணர்கள் கூறுவது என்ன?
டூத் பிரஷில் சிறிதளவு மட்டுமே டூத் பேஸ்ட்டை பயன்படுத்தினால் போதும் இதுவே உங்களது பற்களை நன்றாக சுத்தம் செய்யும். அதுபோல குழந்தைகளுக்கு அதிகளவு டூத் பேஸ்ட் கொடுக்கக் கூடாது குறைந்த அளவில் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், அது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவுக்கும். அளவுக்கு அதிகமாக டூத் பேஸ்ட் பயன்படுத்தினால் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். எனவே மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு குழந்தைக்கு எந்த டூத் பேஸ்ட் கொடுப்பது நல்லது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வாய் ஆரோக்கியத்திற்காக, பெரியவர்கள் பட்டாணி அளவிலும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மிளகு அளவிலும், மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் அரசி அளவிலும் டூத் பேஸ்ட் பயன்படுத்தினால் போதும்.