இன்றைய காலத்தில் சிறுநீரக கற்கள் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. குறிப்பாக இளைஞர்களிடையே இந்த பிரச்சனை அதிகமாக காணப்படுகின்றன. சிறுநீரக பாதையில் உருவாகும் உப்புக்கள் மற்றும் தாதுக்களின் சிறிய, கடினமான படிகங்கள் தான் கற்களாக மாறுகின்றன. இந்த பிரச்சினையை இயற்கையாகவே அகற்ற நீங்கள் விரும்பினால் பப்பாளி விதைகளை சாப்பிடுங்கள். ஆமாங்க, பப்பாளி பழம் மட்டுமல்ல அதன் விதைகள் மற்றும் இலைகளும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இத்தகைய சூழ்நிலையில், சிறுநீரக கற்களை அகற்ற பப்பாளி விதை எவ்வாறு உதவுகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
24
பப்பாளி விதைகள் நன்மைகள்
பப்பாளி விதைகளில் கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஆகவே, அவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் வெளியேறிவிடும். அதுமட்டுமல்லாமல், எடையை குறைக்க சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளையும் பப்பாளி விதைகள் நமக்கு வழங்குகிறது.
34
சிறுநீரக கற்களை அகற்ற பப்பாளி விதைகளை எப்படி சாப்பிடணும்?
உங்களுக்கு சிறுநீரக கற்கள் பிரச்சனை இருந்தால் உலர்ந்த பப்பாளி விதைகளை தினமும் சாப்பிடுங்கள். அதுமட்டுமல்லாமல் பல்வேறு வழிகளில் உங்களது உணவுகளிலும் சேர்த்துக் கொள்ளலாம். உதாரணமாக பப்பாளி விதைகளை அப்படியே மென்று சாப்பிடலாம், பொடியாக அரித்து சாப்பிடலாம், ஸ்மூத்திகள், சாலடுகள், பழச்சாறுகள் மற்றும் தயிர்களில் சேர்த்து சாப்பிடலாம்.
பப்பாளி விதைகளை நன்கு கழுவி உலர்த்தி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் பப்பாளி விதைகள், தயிர், பால், தேன் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். கிரீமியாக மாறும் வரை அரைக்கவும். விரும்பினால் ஐஸ் கட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் டேஸ்டியான பப்பாளி விதை ஸ்மூத்தி தயார்.