Winter Bathing Tips : வெந்நீர் vs குளிர்ந்த நீர் : குளிர்காலத்துல எந்த நீரில் குளிப்பது உடலுக்கு நல்லது?

Published : Oct 08, 2025, 01:00 PM IST

குளிர்காலத்தில் வெந்நீர் அல்லது குளிர்ந்த நீர் இந்த இரண்டில் எதில் குளித்தால் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

PREV
14
Winter Bathing Tips

குளிர்காலம் ஆரம்பமாகிவிட்டது. இந்த சூழ்நிலையில் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். ஏனெனில் இந்த பருவத்தில் தான் பாக்டீரியாக்கள், தொற்றுகள் கிருமிகள், வைரஸ்கள் மிக வேகமாக பரவி டெங்கு, மலேரியா போன்ற ஆபத்தான தொற்று நோய்களை ஏற்படுத்தி விடும். இதற்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் மட்டும் போதாது. தினமும் காலை, மாலை என இரண்டு வேளையும் கண்டிப்பாக குளிக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லதா? அல்லது வெந்நீரில் குளிப்பது நல்லதா? என்று சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதற்கான பதிலை இங்கே பார்க்கலாம்.

24
குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளியல் :

குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் ஒருபோதும் குளிக்கவே கூடாது. அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று சொல்லப்படுகிறது. ஏனெனில், குளிர்காலத்தில் உடலில் குறிப்பிட்ட அளவு வெப்பநிலை அவசியம். அத்தகைய சூழ்நிலையில், குளிர்ந்த நீரில் குளித்தால் உடலானது தானாகவே சூட்டை உற்பத்தி செய்ய முயற்சி செய்யும். இதனால் ஆரோக்கியத்தில் கடுமையான அசெளகரியம் தான் ஏற்படும்.

34
குளிர்காலத்தில் சூடான நீரில் குளியல் :

குளிர்காலத்தில் சூடான நீரில் குளிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் இது உடலுக்கு தேவையான சூட்டை வழங்குவது மட்டுமல்லாமல் உடலை சோர்வில் இருந்து நீக்கி சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. மேலும் உடலில் உரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், தசைகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கவும் உதவும்.

44
நினைவில் கொள் :

நீங்கள் குளிர்காலத்தில் சூடான நீரில் குளிக்க போகிறீர்கள் என்றால், அதிக சூடான நீரை நேரடியாக தலைக்கு ஊற்ற கூடாது. அதுமட்டுமின்றி, அதிக சூடான நீரில் குளித்தால் சருமம் வறட்சியாகிவிடும் மற்றும் உடலில் இருக்கும் இயற்கை எண்ணெய் அகன்று விடும். இதனால் சில உடல்நல பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories