பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்போதுமே மகிழ்ச்சியாக வைக்க விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் கேட்டது மட்டுமல்ல, கேட்காததை கூட வாங்கி கொடுக்கிறார்கள். ஆனால் குழந்தைகளுக்கு இது மட்டும் போதாது. அவர்கள் பயப்படும்போது, கவலைப்படும்போது அல்லது காயப்போடும்போது அவர்களை எவ்வாறு சமாதானப்படுத்துவது என்பதை அறிந்து கொள்வது ரொம்பவே முக்கியம். பெற்றோர்கள் இவ்வளவு அன்பாக இருந்தாலும் குழந்தைகள் தன்மீது பெற்றோர் அன்பாக இல்லையே என்று சில சமயங்களில் நினைப்பார்கள். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்கள் குழந்தையின் மீது அன்பாக இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்த தினமும் இந்த மூன்று மந்திர வார்த்தைகளை சொல்லுங்கள். அவை என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
24
நான் உன்னை நேசிக்கிறேன்....
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது அன்பு வைத்தால் மட்டும் போதாது அதை அவர்களிடம் சொல்லவும் வேண்டும். குழந்தைகள் ஏதேனும் சின்ன தவறு செய்தாலோ அல்லது உங்கள் மீது பயம் இருந்தால் கூட பெற்றோரின் அன்பு ஒருபோதும் மாறவே மாறாது என்று அவர்களுக்கு சொல்லுங்கள். உங்களது அன்பை அவர்கள் மீது தொடர்ந்து வெளிப்படுத்துங்கள். இதனால் அவர்கள் ஏதேனும் பதட்டமாக இருந்தாலோ அது குறையும்.
34
உனக்கு எந்த பயமும் இல்லை....
குழந்தைகளுக்கு பயம் ஏற்படும்போது, 'நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்' என்று சொல்வது அவர்களின் மூளைக்கு சமிக்ஞை அனுப்பும். 'பயமில்லை, நீ பாதுகாப்பாக இருக்கிறாய்' என்ற வார்த்தை தைரியத்தைக் கொடுக்கும்.
'நான் உனக்காக இருக்கிறேன்' என்ற சிறிய வார்த்தை குழந்தைகளுக்கு தைரியத்தையும், உணர்ச்சிபூர்வமான பாதுகாப்பையும் அதிகரிக்கும். அவர்கள் தனிமையில் இல்லை என்ற உணர்வை இது தரும். இந்த வார்த்தைகளை அமைதியான குரலில், அன்புடன் சொல்ல வேண்டும்.