Parsvottanasana Benefits: இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால், இடுப்பு பகுதியில் உள்ள அதிக சதையை கரைக்க உதவும், இருதய நலன் பாதுகாக்கப்படும் உகந்த ஆசனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய மேற்கத்திய உணவு கலாச்சாரத்தில், பெரும்பாலான மக்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை அதிகரித்து காணப்படுகிறது. இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்ந்தால், மாரடைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்படும். எனவே, உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமாகிறது. எனவே, ஆசனம் செய்வதின் மூலம் கொலஸ்ட்ராலை எவ்வாறு கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்பதை இங்கே விரிவாக தெரிந்துக்கொள்ளுங்கள்.
பார்சுவோத்தானாசனத்தை தொடர்ந்து பயின்று வர இருதய நலன் பாதுகாக்கப்படுவதோடு, முதுகுத்தண்டு மற்றும் முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது. தோள்களை விரிக்கிறது. நுரையீரலைப் பலப்படுத்துகிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. உடலின் ஆற்றலை வளர்க்கிறது. இடுப்புப் பகுதியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. இடுப்புப் பகுதியில் உள்ள அதிக சதையைக் கரைக்க உதவுகிறது. சையாடிக் வலியைப் போக்க உதவுகிறது.
33
Parsvottanasana Benefits:
செய்முறை:
1. விரிப்பில் நேராக நிற்கவும். இரண்டு கால்களுக்கு இடையில் சற்று இடைவெளி விட்டு நிற்கவும். வலது காலை பின்னால் நீட்டி முட்டியிலிருந்து பாதம் வரையில் தரையில் படுமாறு வைக்கவும்.
2. கைகளை மேல் நோக்கி உயர்த்தவும். இரண்டு உள்ளங்கைகளும் ஒன்றை ஒன்று பார்த்தவாறு இருக்க வேண்டும். நேராகப் பார்க்கவும். வயிற்றுப் பகுதியை முன்தள்ளி முதுகை வளைத்து தலையையும் கைகளையும் பின்னால் சாய்த்தவாறும் இவ்வாசனத்தைப் பழகலாம்.
3. இந்நிலையில், 20 வினாடிகள் இருக்கவும். பின், மூச்சை உள்ளிழுத்தவாறு நிமிரவும். பின் கால் மாற்றி இடது புறம் செய்யவும். இருப்பினும், தீவிர மூட்டுப் பிரச்சனை, இடுப்பில் பிரச்சனை இருந்தால் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.