உடற்பயிற்சி செய்த பின் இந்த ஒரு தப்ப மட்டும் பண்ணாதீங்க.. இல்லனா பிரச்சினை தான்!

First Published | Sep 18, 2024, 11:15 AM IST

Risks of Drinking Water After Exercise : நீங்கள் தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்து உடனேயே தண்ணீர் குடிக்கம் இருந்தால் உடனே அதை நிறுத்துங்கள். இல்லையெனில் ஆபத்து.

Risks of Drinking Water After Exercise In Tamil

இன்றைய காலத்தில் ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு உடற்பயிற்சி செய்கிறார்கள். இதனால் அவர்கள் தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்து வருகிறார்கள். உடற்பயிற்சி என்பது நம்முடைய உடலை வலுப்படுத்தும் ஒரு செயல்முறையாகும். மேலும் இது ஒரு ஆரோக்கியமான பழக்கம் என்று சொல்லலாம். தினமும் உடற்பயிற்சி செய்வதினால் உடலில் இருக்கும் கலோரிகள் எடுக்கப்பட்டு உடல் எடையை குறைக்கும். இதுதவிர, இதன் மூலம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பது உறுதி.

நாம் தினமும் உடற்பயிற்சி செய்வதினால் இதய ஆரோக்கிய மேம்படும், சர்க்கரை நோய் அபாயம் குறையும், தசைகள் வலுப்பெறும், நிம்மதியான தூக்கம் கிடைக்கும், உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும், மனநிலை மேம்படும் மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கும் போன்ற பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். 

ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி செய்வதினால் உடலில் இருந்து அதிகமாக வியர்வை வெளியேறும். இதனால் தாகம் அதிகமாக எடுக்கும். பொதுவாக உடற்பயிற்சி செய்யும் போது அவ்வப்போது தண்ணீர் குடிக்கலாம்.

Risks of Drinking Water After Exercise In Tamil

இப்படி தண்ணீர் குடிப்பது மூலம் உடற்பயிற்சி செய்யும் போது தசைகளில் ஏற்படும் பாதிப்பை சரி செய்யும், தசைகள் வளர்ச்சி அடையும் மற்றும் உடல் வறட்சி அடைவது தடுக்கும். உடற்பயிற்சிக்கு பிறகு தண்ணீர் அல்லது எனர்ஜி பானங்கள் குடிப்பது நல்லது என்றாலும், உடற்பயிற்சி செய்த உடனேயே தண்ணீர் குடிப்பது நல்லதல்ல. அது ஏன்? அப்படி குடித்தால் என்ன ஆகும் என்று இங்கு பார்க்கலாம்.

உடற்பயிற்சி செய்த உடனேயே தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்?

செரிமான அமைப்பில் பிரச்சினை :

உடற்பயிற்சி செய்து முடித்த உடனேயே அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் செரிமான அமைப்பில் மோசமான பிரச்சனையை உண்டாக்கும். காரணம், தண்ணீர் குடிப்பதனால் நம் உடலில் வெப்பநிலை குறையும், இதனால் தசை திசுக்களின் பழுது பார்க்கும் பணியும் உடல் உள்ளையே நடக்கிறது. இதனால் வயிற்று வீக்கம் வயிற்றுப் பிடித்துக் கொள் அல்லது குமட்டல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே, உடற்பயிற்சி செய்த பிறகு சிறிது நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது.

Tap to resize

Risks of Drinking Water After Exercise In Tamil

எலக்ட்ரோலைட்டுகள் வெளியேறும் : 

நாம் உடற்பயிற்சி செய்யும் போது நம் உடலில் இருந்து வியர்வை மூலம் தண்ணீர் மட்டுமின்றி சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற அத்தியாவாசிய எலெக்ட்ரோலைட்டுக்களும் வெளியேற வாய்ப்பு அதிகம் உள்ளது. உடற்பயிற்சி செய்த உடனேயே தண்ணீர் குடித்தால் நம் உடலில் இருக்கும் எலக்ட்ரோலைட் உள்ளடக்கத்தை நீர்த்துப்போகச் செய்யும். இது இயற்கையாகவே இவற்றின் சமநிலைக்கு வழிவகுக்கும். இதனால் தசைப்பிடிப்பு, தலை சுற்றல், தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே, உடற்பயிற்சி செய்த பிறகு எலக்ட்ரோலைட் நிறைந்த உணவுகள், எனர்ஜிக் பானங்கள் எடுத்துக் கொள்வது நல்லது.

ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சி போடுவது தடுக்கப்படும் :

உடற்பயிற்சிக்கு பிறகு அதிக தண்ணீர் குடித்தால், நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் சத்துக்கள் நம் உடலுக்கு சரியாக உறிஞ்சப்படாமல் தடுக்கப்படும். எனது உடற்பயிற்சி செய்த பிறகு சிறிது நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது.

இதையும் படிங்க:  ஜிம் போகாமல், ஒர்க் அவுட் செய்யால் உங்கள் தொப்பையை ஈஸியா குறைக்கலாம்.. நிபுணர் சொன்ன டிப்ஸ்

Risks of Drinking Water After Exercise In Tamil

தசை பிரச்சினை :

உடற்பயிற்சி செய்து முடித்த உடனேயே தண்ணீர் குடித்தால் நமது தசைகளை மீட்டெடுக்க நேரம் இழக்கப்படும். உடற்பயிற்சிக்கு பிறகு நம் உடல் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நேரம் அதிகம் எடுக்கும். இது திசுக்களில் நீர் உள்ளடக்கம் அதிகரிக்கும் மற்றும் சில நேரங்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். உடற்பயிற்சி செய்த பிறகு தண்ணீர் குடிப்பது தசை திசுக்களின் மீட்சிக்கு ரொம்பவே உதவியாக இருக்கும்.

இரத்த சர்க்கரை அளவு பாதிக்கப்படும் :

உடற்பயிற்சிக்குப் பிறகு நம் உடலின் தசை திசு இன்சுலினுக்கு அதிக உணர்திறனை வெளிப்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், அதிக தண்ணீர் குடித்தால் உடலில் ரத்த சர்க்கரை அளவு மோசமாக பாதிக்கப்படும். மேலும் ரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்திருக்க உடற்பயிற்சிக்கு பிறகு சிறிது நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது.

Risks of Drinking Water After Exercise In Tamil

உடற்பயிற்சி செய்த பிறகு இவற்றை சாப்பிடுங்கள் : 

உடற்பயிற்சி செய்த பிறகு வாழைப்பழத்தை சாப்பிடுங்கள். ஏனெனில், இந்த பழம் உங்கள் தசைகளை உற்சாகப்படுத்தவும் உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக வழங்கவும் உதவுகிறது.

உடற்பயிற்சி செய்த பிறகு மூட்டை சாப்பிடலாம். இதனால் உடல் வலிமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

அதுபோல உடற்பயிற்சி செய்த பிறகு உலர் பழங்களை சாப்பிடுவது நல்லது. ஏனெனில், அவை உடலுக்கு தேவையான புரத உள்ளடக்கம் மற்றும் நிறைய கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளது. உதாரணமாக ஊறவைத்த பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்றவை ஆகும்.

உடற்பயிற்சி செய்த பின் ஒரு கப் தயிர் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இது உடலின் வளர்ச்சிதை மாற்ற செயல் முறையை தூண்டுவது மட்டுமல்லாமல், உடற்பயிற்சிக்கு பிறகு நமது தசைகளுக்கு போதுமான வலிமையையும் அளிக்கிறது.

இதையும் படிங்க:  காலை நடைபயிற்சியால் முழங்கால் வலியா? அப்ப கண்டிப்பா இதை ஃபாலோ பண்ணுங்க..

Latest Videos

click me!