
பற்கள் தான் ஒருவருது சிரிப்பிற்கு அழகை கூட்டிக் கொடுக்கிறது. அது யாராக இருந்தாலும் சரி பற்கள் முத்து போல பார்ப்பதற்கு வெண்மையாக இருந்தால் ரொம்பவே அழகாக இருக்கும். ஒருநபர் எவ்வளவுதான் முகம் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அந்த நபர் சிரிக்கும் போது மற்றும் பேசும்போது பற்கள் நன்றாக இல்லை என்றால் அவரது அழகு வீண் என்றே சொல்லலாம். ஒருவருக்கு முக அழகு மட்டுமின்றி, பற்களின் அழகும் மிகவும் அவசியம் என்பதை இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால், உங்களுக்கு தெரியுமா.. பாக்டீரியாக்கள் அதிகமாக பரவுவது வாய்ப்பகுதியில் தான். ஆகவே, நாம் நம்முடைய வாய்ப்பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். இத்தகைய சூழ்நிலையில், எல்லோரும் பற்களில் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை எதுவென்றால், ஈறுகளில் ரத்தம் வருவது தான். ஈறுகளில் ரத்தம் வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதை இயற்கையான வழியில் சரி செய்வது எப்படி என்பதை குறித்து தான் இன்றைய பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
இயற்கை முறையில் ஈறுகளில் ரத்தம் வருவதை சரி செய்ய டிப்ஸ் :
ஈறுகளில் ரத்தம் வருவதை தடுக்க தினமும் காலை எழுந்தவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள சிலவற்றை செய்ய வேண்டும். இதன் மூலம் ஈறுகள் ரத்தம் வருவதை சுலபமாக தடுக்கலாம்.
தேங்காய் எண்ணெயில் ஆயில் புல்லிங் :
ஆயுர்வேதத்தின் படி, தினமும் காலை எழுந்தவுடன் தேங்காய் எண்ணெயில் ஆயில் புல்லிங் செய்வது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. இப்படி செய்வது இதயத்திற்கு மட்டுமின்றி, பற்களை வலிமையாகவும், வெண்மையாகவும் ஆக்குகிறது. ஒருவேளை உங்களுக்கு தேங்காய் எண்ணெயில் இருந்து வரும் வாசனை பிடிக்கவில்லை என்றால், நீங்கள் நல்லெண்ணெய் கூட பயன்படுத்தலாம்.
தேன் :
நீங்கள் இரவு தூங்கச் செல்வதற்கு முன் உங்களது பற்களிலும் ஈறுகளிலும் தேனை தடவி, பிறகு மறுநாள் காலையில் வாய் கொப்பளித்தால் ஈறுகளில் ரத்த கசிவு ஏற்படுவது தவிர்க்கப்படும்.
இதையும் படிங்க: பெற்றோர்களே.. உங்க குழந்தைகளுக்கு பல் சொத்தை ஏற்படாமல் தடுக்க சூப்பரான டிப்ஸ்!!
கிரீன் டீ :
கிரீன் டீயில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளது. இது வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது மற்றும் பற்கள் ஈறுகளில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கப் டீ குடித்து வந்தால் உங்கள் ஆரோக்கியம் மட்டுமின்றி, உங்கள் பற்களும் ஆரோக்கியமாக இருக்கும்.
மாதுளை ஜூஸ் :
மாதுளை பழத்தில் பாக்டீரியாக்களை உண்டாக்கும் மற்றும் நச்சுத்தன்மையை அழிக்கும் பண்புகள் உள்ளதால், தினமும் காலை எழுந்தவுடன் சிறிதளவு மாதுளை ஜூஸை கொண்டு வாய் கொப்பளிக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் ஈறுகளில் ரத்தம் வருவது விரைவில் நின்றுவிடும். ஆனால், இதில் சர்க்கரை சேர்க்கக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
உப்பு தண்ணீர் :
உப்பு தண்ணீரை கொண்டு தினமும் காலை இரவு என இரண்டு வேளையும் வாய் கொப்பளித்து வந்தால், பற்களில் மற்றும் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிவு வருவது தடுக்கப்படும் மற்றும் பற்களும் ஆரோக்கியமாக இருக்கும்.
வேப்ப எண்ணெய் :
ஈறுகளில் இரத்த வடிவதை நிறுத்த வேப்ப எண்ணெய் பெரிதும் உதவுகிறது. எனவே, இரவு தூங்கும் முன் ஈறுகளில் இந்த வேப்ப எண்ணெயை தடவி, பின் மறுநாள் காலை வாயை கழுவி விடுங்கள்.
கற்றாழை :
கற்றாழை உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமின்றி, சருமத்திற்கும், கூந்தலுக்கும் பொலிவைத் தரும். இதுதவிர, பற்களில் இருந்து ஈறுகளில் இருந்து இரத்தம் வருவதை தடுக்க கற்றாழை சாற்றில் ஒரு சிட்டிகை போக்கிங் சோடாவை சேர்த்து அதில் வாய் கொப்பளிக்கவும். இப்படி செய்து வந்தால் ஈறுகளில் இரத்தம் வருவது தடுக்கப்படும்.
இவற்றை நினைவில் வைத்து கொள் :
நீங்கள் எப்போதும் சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்க மறக்காதீர்கள். ஏனெனில், வாயில் உணவு துகள்கள் எஞ்சில் இருக்கும். இதனால் பாக்டீரியாக்கள் பெருகும். எனவே, எப்போதும் என்ன சாப்பிடாலும் கண்டிப்பாக வாய் கொப்பளிக்கவும்.
ஈறுகளில் வலி வந்தாலோ, இரத்த கசிவு வந்தாலோ மிருதுவான பிரஷ் மூலம், ஈறுகளை ரொம்பவே அழுத்தாமல் பற்களை பிரஷ் செய்யுங்கள். ஆனால், விரல்களை கொண்டு ஒருபோதும் பற்களை துலக்கக் கூடாது. இதனால் பற்களில் கறைபடியும் மற்றும் பற்களின் ஆரோக்கியம் கேடும்.
அதுபோல, பற்களை ரொம்ப நேரம் துலக்க கூடாது. இதனால் பற்களின் எனாமல் குறைந்து, பற்கள் வலுவடையும். அதுமட்டுமின்றி, ஈறுகளில் வீக்கம் ஏற்படும் மற்றும் இரத்தமும் வடியும்.
பற்களை கொண்டு ஒருபோதும் நகங்களை கடிக்க கூடாது. மேலும் குண்டு ஊசி போன்ற கூர்மையான பொருட்களை பயன்படுத்த கூடாது. இப்படி செய்வதினால் பற்களில் நோய் தொற்று ஏற்படும்.
புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். இது ஈறுகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதுமட்டுமின்றி, இதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் மற்றும் ஈறுகளும் ஆரோக்கியமாக இருக்கும்.
உங்களது ஈறு ஆரோக்கியமாக இருக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். எனவே, நீங்கள் சரியான அளவில் தண்ணீர் குடித்து வந்தால் உங்கள் உடல் புத்துணர்ச்சியாக இருப்பது மட்டுமின்றி, ஈறுகளும் சரியாக செயல்படும்.
இதையும் படிங்க: டூத் பேஸ்டை இதுக்கு கூட பயன்படுத்தலாமா?! அட ச்சே.. இது தெரியாம போச்சே.!