Raw Egg Side Effects In Tamil
நம் ஆரோக்கியமாக இருக்க தினமும் ஊட்டச்சத்துக் கொண்டிருந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அவற்றில் ஒன்றுதான் முட்டை. முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதாவது புரதம், கால்சியம் மற்றும் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை அனைத்தும் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. அதனால் தான் பலர் தினமும் முட்டை சாப்பிடுகிறார்கள். மேலும் இதை இலகுவாக பெற்றுக் கொள்ளலாம். முட்டையை அவிழ்த்து, பொறித்து, வறுத்து, ஆம்லெட் என பலரும் பல விதங்களில் . சாப்பிடுபவர்கள். ஆனால் சிலரோ பச்சை முட்டையை அப்படியே குடிப்பார்கள்.
Raw Egg Side Effects In Tamil
பொதுவாக பூப்படைந்த பெண்களுக்கு பச்சை முட்டை குடிக்க கொடுப்பார்கள். இது காலம் காலமாகவே நடைமுறையில் உள்ளது. பருவமடைந்த பெண்களுக்கு பச்சை முட்டையை 16 நாட்கள் கண்டிப்பாக குடிக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லுவார்கள். அதுபோலவே உடற்பயிற்சி செய்பவர்களும் பச்சை முட்டையை குடிப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் பச்சை முட்டையை குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சொல்லப்படுகிறது மேலும் அப்படி குடிப்பதால் உடலில் சில பிரச்சனைகள் ஏற்படும் என்றும் சொல்லுகின்றனர்.
இதையும் படிங்க: முட்டை சாப்பிடுவதால் உடலில் அதிக கொழுப்பு சேருமா? உண்மை என்ன?
Raw Egg Side Effects In Tamil
பச்சை முட்டையை ஏன் குடிக்க கூடாது?
பச்சை முட்டைகளில் சால்மொனெல்லா என்னும் பாக்டீரியா இருக்கலாம். இது உணவில் பரவும் நோய்களுக்கு பொதுவான காரணமாகும். இந்த பாக்டீரியா காரணமாக வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் பிடிப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். ஒருவேளை இந்த பாக்டீரியா ரத்தத்தில் கலந்தால் அவை வாழ்நாள் முழுவதும் தொற்று நோயை ஏற்படுத்தும். ஆனால் இது அரிதானது. சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் பச்சை முட்டை குடித்தால் அதிலிருக்கும் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு தீவிரமாக நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
இதையும் படிங்க: பாலுடன் முட்டையா? நன்மைகளுடன் வரும் ஆபத்து!
Raw Egg Side Effects In Tamil
பச்சை மூட்டை குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்:
- பச்சை முட்டையில் இருக்கும் வெள்ளை கருவில் இருக்கும் புரதம் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதாவது படை நோய், வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை இதில் அடங்கும்.
- இது தவிர வெள்ளை கருவில் இருக்கும் புரதம் பயோடின் உடன் பிணைக்கப்பட்டு உடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. இதனால் பயோடின் குறைபாடு, சரும வெடிப்பு, முடி உதிர்தல் மற்றும் நரம்பியல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
- பச்சை முட்டையை குடிப்பதால் வயிற்று உப்புசம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போட்டு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- முட்டையை சமைத்து சாப்பிட்டால் அதில் இருக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்களின் தன்மை அதிகரிக்கும். ஆனால் பச்சையாக குடித்தால் இந்த முக்கியமான ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டை ஏற்படுத்தும்.
Raw Egg Side Effects In Tamil
முக்கிய குறிப்பு:
ஒருவேளை நீங்கள் பச்சை முட்டை குடிக்க விரும்பினால் நன்கு கழுவ வேண்டும். முக்கியமாக புதிய முட்டைகளை மட்டுமே குடிக்க வேண்டும். முட்டையின் ஓட்டில் விரிசல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முட்டையை முழுவதுமாக அப்படியே விழுங்காமல் நன்கு மென்று சாப்பிடுங்கள்.
* பச்சை முட்டையை குடிப்பதை விட வேகவைத்த முட்டை சாப்பிட்டால் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெற முடியும்.