black seed oil benefits for hair growth in tamil
தற்போது மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் பலரும் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் தலைமுடி பிரச்சினை. தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் போதிய ஊட்டச்சத்து இல்லாததால் முடி உடைவது முடி உதிர்வது மற்றும் முடி வறட்சியாவது போன்ற கூந்தல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும். எனவே இந்த பிரச்சினையை தவிர்க்க பலர் பலவிதமான பொருட்களை தலை முடிக்கு பயன்படுத்துகிறார்கள். சிலரோ பணம் அதிக செலவழித்து தலைமுடியை பராமரிக்கிறார்கள். ஆனால் அவை அனைத்திலும் ரசாயனங்கள் கலந்திருப்பதால் அவை தலைமுடி ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
black seed oil benefits for hair growth in tamil
வீட்டில் இருக்கும் சில பொருட்களை நீங்கள் தலைமுடிக்கு பயன்படுத்தலாம். இதனால் கூந்தல் சார்ந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். இதற்கு கருஞ்சீரகம் உங்களுக்கு நிச்சயம் உதவும். கருஞ்சீரகம் கலோஞ்சி என்றும் அழைக்கப்படுகின்றது. கருஞ்சீரகத்தை கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெய்யை உங்கள் தலைமுடிக்கு பயன்படுத்தி வந்தால் நரைமுடி மறையும், முடி கருப்பாக மாறும். இது தவிர முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும். கூடவே பல நன்மைகளையும் வழங்கும்.
இதையும் படிங்க: முடி உதிர்வுக்கு உணவும் காரணம்.. அடர்த்தியாக முடி வளர '7' உணவுகள்..
karunjeeragam oil benefits for hair growth in tamil
கருஞ்சீரக எண்ணெய் தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய் - 100 மி.லி
கருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை:
முதலில் மிக்ஸி ஜாரில் கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை போட்டு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைத்து அதில் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடுப்படுத்தவும். அடுத்ததாக அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து தேங்காய் எண்ணெயின் நிறம் மாறும் வரை கலந்து விடுங்கள். பிறகு அதை அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆறியதும், ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்து பயன்படுத்துங்கள். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி கருகருவென்று நீளமாக வளரும்.
karunjeeragam oil benefits for hair growth in tamil
தலைமுடிக்கு கருஞ்சீரக எண்ணெய்யின் நன்மைகள்:
- கருஞ்சீரக எண்ணெய் தலைமுடியின் வளர்ச்சியை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. இதில் இருக்கும் பண்புகள் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
- கருஞ்சீரக எண்ணெய் முடி உதிர்வேர் கட்டு குறித்து தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
- முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக முடி முளைக்க கருஞ்சீரக எண்ணெய் பெரிதும் உதவுகிறது.
- தலைமுடியின் வேர்க்கால்களின் வறட்சிய அரிப்பு போன்ற பிரச்சனைகளை சரி செய்யும்.
இதையும் படிங்க: கொத்து கொத்தா முடி கொட்டுதா? நீங்க சாதாரணமா பண்ற இந்த பழக்கத்தை விடுங்க!