Multivitamins
நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ விரும்புகிறீர்களா? வைட்டமின்கள் நமக்கு உணவில் கிடைக்கின்றன. இல்லையென்றால், அவற்றை சப்ளிமெண்ட்ஸ் வடிவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ சில வைட்டமின் சப்ளிமெண்ட்ஸை அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Multivitamins
சப்ளிமெண்ட்ஸ் என்றால் என்ன? நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் உணவில் முழுமையாகக் கிடைக்கவில்லை என்றால், அவற்றை மாத்திரைகள் வடிவில் எடுத்துக்கொள்கிறோம். இவற்றையே சப்ளிமெண்ட்ஸ் என்று அழைக்கிறோம்..
Multivitamins
இரும்புச்சத்து... நமது உடலுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். இரும்புச்சத்து குறைவாக இருந்தால், இறைச்சி, கோழி போன்ற உணவுகளை உட்கொள்கிறோம். ஆனால், இரும்புச்சத்தை மாத்திரைகள் வடிவில் எடுத்துக்கொள்ளக் கூடாது. குறிப்பாக, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இரும்புச்சத்து சப்ளிமெண்ட்ஸை எடுத்துக்கொள்வது நல்லதல்ல.
Multivitamins
வைட்டமின் E உங்கள் உடலுக்கு ஒரு முக்கியமான ஊட்டச்சத்து. இரத்தம் உறைவதைத் தடுப்பதிலும், செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாப்பதிலும், நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுதலிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், வைட்டமின் E அதிகமாக இருப்பதால் புரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது.
Multivitamins
மல்டிவிட்டமின்கள்... மருத்துவரை அணுகாமல் பலருக்கும் மல்டிவிட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் பழக்கம் உள்ளது, ஆனால் இது உங்கள் இறப்பு ஆபத்தை அதிகரிக்கும். மல்டிவிட்டமின்கள் எடுத்துக்கொள்வது நல்லது, ஆனால் அதிகமாக எடுத்துக்கொண்டால் பெரிய பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.
Multivitamins
தினமும் எந்த வைட்டமின் எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்? சப்ளிமெண்ட்ஸ் தேவைப்படாமல் ஆரோக்கியமாக இருப்பது எப்படி? முடிந்தவரை, நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்களை உணவு மூலம் எடுத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.