
பொதுவாக எந்த ஒரு மூலிகை வேண்டும் என்றாலும் நாம் நாட்டு மருந்து கடையை நோக்கி தான் ஓடுவோம். அதற்கு பதிலாக நீங்களே உங்களது வீட்டிலேயே நல்ல பலன் தரக்கூடிய சில மூலிகை தாவரங்களை வளர்த்து அதன் பலன்களை பெறலாம் தெரியுமா? மேலும் அந்த மூலிகை செடிகள் உங்களுக்கு நன்மைகளை வழங்குவது மட்டுமின்றி, உங்கள் வீட்டை அழகாகவும் காட்டும்.
இதையும் படிங்க: மழை காலத்தில் பாம்புகளை விரட்ட இந்த 5 செடிகளை வீட்டில் வளர்த்தால் போதும்!!
தற்போது ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் இந்த மூலிகை செடிகள் தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இவை நம்முடைய உடலுக்கு எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது. பாட்டி வைத்திய முறையில் கூட இந்த மூலிகை செடிகள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த மூலிகை செடிகளை சில வீட்டு வைத்தியங்கள் கூட நீங்கள் பயன்படுத்தலாம். சரி, இப்போது எந்தெந்த மூலிகைச் செடிகளை உங்கள் வீட்டில் வளர்க்கலாம் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: வீட்டு முன்பு பப்பாளி மரம் வளர்க்கலாமா? வளர்த்தால் வாஸ்துபடி என்ன நடக்கும்?
துளசி செடி:
இந்து மதத்தில் துளசி செடி புனிதமாக கருதப்படுகிறது. துளசி இலைகளை பச்சையாகவோ அல்லது மூலிகை டீயாகவோ கூட எடுத்துக் கொள்ளுங்கள். துளசியில் நான்கு வகைகள் உள்ளன. கற்பூர துளசி அவற்றில் ஒன்று. இந்த துளசியில் இருந்து தயாரிக்கும் எண்ணெய்யை காது பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது தவிர இந்த துளசியில் இருந்து சோப்பு ஷாம்பு, காது சொட்டு மருந்து போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. துளசியில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்ட்டிபயாட்டிக் பண்புகள் போன்றவை காய்ச்சல் சளி, இருமல் ஜலதோஷம் சுவாச பிரச்சனை போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது.
புதினா:
வீட்டில் எளிதாக வளர்க்கக்கூடிய ஒரு முக்கியமான மூலிகை செடி இதுவாகும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மாங்கனீஸ் அதிகமாகவே உள்ளது. புதினா இலையானது வயிற்று வலி, வாயு, காய்ச்சல், பெருங்குடல் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்தும். முக்கியமாக புதினா இலையானது ஒரு சிறந்த வாய்ப்பு புத்துணர்ச்சியாக செயல்படுகிறது.
எலுமிச்சை:
ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள எலுமிச்சையை நீங்கள் உங்கள் வீட்டில் மரமாகவோ அல்லது தொட்டில் வைத்துக் கூட வளர்க்கலாம். இதை நீங்கள் தீ சாலட் போன்ற உங்களுக்கு பிடித்தமான அனைத்து வலிகளில் எடுத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சை இலையானது மன அழுத்தம், நரம்பியல் போன்றவற்றிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தவிர உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், காய்ச்சலை சரி செய்யவும், தொண்டை தொற்றுக்களை குணமாக்கவும், மூச்சுப் பிரச்சனை, மூட்டு வலி, தசை வலி தலைவலி, அடிவயிற்றில் வலி, வயிற்று வலி தசை சுருக்கம் உள்ளிட்ட அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் இது ரொம்பவே நல்லது.
வேம்பு:
பழங்காலத்திலிருந்து மருத்துவத்தில் இது பயன்படுத்தப்படுகிறது இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது வீட்டில் வளர்க்க கூடிய மிக முக்கியமான மரமாகும். வேப்ப பூ முதல் அதன் பட்டவரையின் அனைத்திலும் மருத்துவ குணங்கள் உள்ளன முக்கியமாக வேப்ப இலையானது சிறந்த குடற்புழு நீக்கியாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் இது நல்லது.
கற்றாழை:
இது எல்லார் வீட்டிலும் கண்டிப்பாக இருக்கும் ஒரு அற்புதமான செடியாகும். இந்த செடி உங்கள் வீட்டில் இருந்தால் கொசுக்கள் தொல்லை இருக்காது. கற்றாழையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடி வயதாவதை தடுக்க உதவுகிறது. இதற்கு நீங்கள் கற்றாழையை ஜூஸாக குடிக்க வேண்டும். கற்றாழை ஜூசை குடித்தால் செரிமான பிரச்சனை, மலச்சிக்கல், அல்சர் பசியின்மை போன்றவற்றை குணப்படுத்தும். இது தவிர கற்றாழை ஜெல்லை தீக்காயங்கள், புண், அடிபட்ட காயங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை குணமாக்க மருந்தாகவும் பயன்படுத்தலாம். முடி வளர்ச்சிக்கு கூட கற்றாழை ஜூலை பயன்படுத்தலாம்.
இவற்றையும் வளர்க்கலாம்:
மேலே சொன்ன மூலிகைச் செடிகளைத் தவிர அஸ்வகந்தா ல், வெந்தயம், வல்லாரைக் கீரை ஆகியவற்றையும் வளர்க்கலாம்.