
குளிர்காலம் நம் அனைவருக்கும் ரொம்பவே பிடித்தமான காலம். ஆனால் இந்த சீசனில் சருமத்தில் ஏராளமான பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். அதிலும் முதன்மையான ஒரு பிரச்சனை எதுவென்றால் அது சரும வறட்சி தான். சொல்லப்போனால் நம்முடைய உடலில் எந்தவித பாதிப்புமின்றி நன்றாக இருப்பது கை, கால்கள்தான். ஆனால் குளிர்காலத்தில் அதிகப்படியான குளிர் காற்று காரணமாக கை, கால்களில் இருக்கும் இயற்கை எண்ணெய் நீங்கி, வறட்சி அடைந்து, சொறி.. வங்கு பிடித்தது போல் இருக்கும்.
குளிர்காலத்தில் கை கால்களை பராமரிப்பது மிகவும் அவசியம். ஆனால் அதற்காக செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கிரீம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து பராமரித்து வந்தால் கை கால்களில் வறட்சி நீங்கி பட்டு போல மென்மையாக இருக்கும்.
இதையும் படிங்க: சரும அழகு மெருகேற குளிர்காலத்தில் பயன்படுத்தக் கூடாத பொருள்கள்!!
தேங்காய் எண்ணெய்:
தினமும் இரவு தூங்கும் முன் கை கால்களில் தேங்காய் எண்ணெய் தடவி தூங்கினால், குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சியை தடுக்கும்.
ஆலிவ் ஆயில்:
குளிர்காலத்தில் நீங்கள் தினமும் இரவு தூங்கும் முன் கை, கால்களில் ஆலிவ் எண்ணெய் தடவி வந்தால், சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கும். இதனால் கை கால்கள் வறட்சி நீங்கும்.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் தினமும் முகம் ஜொலி ஜொலிக்க இந்த '6' ஃபாலோ பண்ணுங்க!
ஆலிவ் ஆயில் & தேன்:
ஆலிவ் ஆயில் உடன் சிறிதளவு தேன் மற்றும் சர்க்கரை கலந்து அதை ஸ்கிரபாக உங்களது கை கால்களில் தடவி வந்தால், சருமத்தில் இருக்கும் இருந்து செல்கள் நீங்கும். இதனால் சருமத்திற்கு தேவையான ஈரப்பசை கிடைத்து சருமம் பார்ப்பதற்கு பொலிவாக இருக்கும்.
தயிர்:
தயிர் சிறந்த மாய்ஸ்சரைசர் என்பதால் குளிர்காலத்தில் தினமும் உங்களது கை கால்களில் தயிரை தடவி சுமார் 20 நிமிடம் மசாஜ் செய்து பிறகு கழுவ வேண்டும். இது சருமத்திற்கு ஈரப் பசையை தக்க வைக்கும்.
பால்:
குளிர்காலத்தில் தினமும் பாலை கொண்டு உங்களது கை கால்களில் தடவி சிறிது நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேற்றப்படும் மற்றும் சருமத்திற்கு ஈரப்பசை கிடைக்கும்.
ஓட்ஸ்:
கோட்சே பொடியாக்கி அதில் சிறிதளவு பால் சேர்த்து அதை உங்களது கை கால்களில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்துவிட்டு பிறகு 20 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேற்றப்படும் மற்றும் சருமத்தில் ஈரப்பசை கிடைக்கும்