
குளிர்க்காலத்தில் நம்முடைய வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வரும். இந்த சீசனில் உணவு முதல் வாழ்க்கை முறை வரை என அனைத்தும் மாறிவிடும். இந்த பருவத்தில் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக பாதிக்கப்படும். சொல்லப்போனால் குளிர் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அடிக்கடி பலவீனமடையும். இத்தகைய சூழ்நிலையில் உணவில் சரியான மாற்றங்களை செய்தால் மட்டுமே நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
வகையில் குளிர்காலத்தில் பப்பாளி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். குளிர்காலத்தில் பப்பாளி சாப்பிட்டால் உடல் சூடாக இருப்பது மட்டுமின்றி, இந்த சீசனில் ஏற்படும் பருவ கால நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க ஒரு வரப்பிரசாதமாக செயல்படுகிறது. எனவே குளிர்காலத்தில் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: பப்பாளி கூட இந்த '5' உணவுகளை தெரியாம கூட சாப்பிடாதீங்க!!
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்:
குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும். இத்தகைய சூழ்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பப்பாளி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் நிறைந்திக்கும் வைட்டமின் சி மற்றும் பல்வேறு வகையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த பெரிதும் உதவுகிறது. இதனால் பருவகால வைரஸ் தொற்றுகளில் இருந்து நாம் பாதுகாக்கப்படுவோம்.
செரிமானத்திற்கு நல்லது:
குளிர்காலத்தில் செரிமான பிரச்சனை வருவது பொதுவானது. பலரும் இதை எதிர்கொளிக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் இந்த பிரச்சனைகள் சிரமப்படுகிறீர்கள் என்றால், பப்பாளி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், பப்பாளியில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இது தவிர, பப்பாளியில் இருக்கும் பண்புகள் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
எடையை குறைக்கும்:
இந்த குளிர்காலத்தில் நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், பப்பாளி உங்களுக்கு உதவியாக இருக்கும். பப்பாளியில் கலோரிகள் குறைவாகவே உள்ளது. இதுதவிர, இதில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றது.
கண்களுக்கு நல்லது:
பப்பாளியில் இருக்கும் வைட்டமின் சி கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே, கண் பிரச்சனையை தவிர்க்க, உங்களது கண்களை ஆரோக்கியமாக வைக்க பப்பாளி சாப்பிடுங்கள். இது தவிர சர்க்கரை நோயாளிகளுக்கும் பப்பாளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க: எடை குறைக்க ஓடி ஓடி உதவுபவன், சருமத்தின் நண்பன் பப்பாளியின் பயன்கள் பற்றி தெரியுமா?
இதயத்திற்கு நல்லது:
பப்பாளியில் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உடலில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைக்க பெரிதும் உதவுகிறது.
சருமத்திற்கு நல்லது:
குளிர்காலத்தில் சரும வறட்சி, வெடிப்பு போன்ற சரும பிரச்சனைகள் வருவது பொதுவானது. நீங்களும் இதே பிரச்சனையை எதிர்கொள்கிறீர்கள் என்றால், காலையில் பப்பாளி சாப்பிடுங்கள். இதில் உள்ள சத்துக்கள் உங்களது சருமத்தை மேம்படுத்த உதவுகிறது.