உடல்நலப் பிரச்சினைகள்
சில பிரச்சினைகளை விளக்க வேண்டிய அவசியம் இருந்தாலும், உங்கள் பிள்ளைகள் கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் அல்லது சிகிச்சைகள் குறித்து கவலைப்படாமல் இருக்க வேண்டும்.
பாலியல் விஷயங்கள்
பிள்ளைகள் முன் பாலியல் விஷயங்களைப் பற்றி பேசக்கூடாது. அவர்கள் முன் இல்லாத நேரத்தில் நீங்கள் என்ன பேசினாலும் பரவாயில்லை. ஆனால்.. அவர்களுக்குக் கேட்கும்படி மட்டும் பேசக்கூடாது. அவர்களின் வயதைக் கருத்தில் கொண்டு அத்தகைய தலைப்புகள் குறித்து அவர்கள் முன் விவாதத்திற்கு கொண்டு வராமல் இருப்பது நல்லது. அவை பிள்ளைகளுக்கு அந்த தலைப்பில் ஆர்வத்தை அதிகரிக்கும். சிறு வயதிலேயே அந்த விஷயங்களைத் தெரிந்து கொள்வது நல்லதல்ல.
குடும்ப உறுப்பினர்கள்
உறவினர்கள் அல்லது குடும்ப வரலாறு பற்றிய எதிர்மறையான கதைகளைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும், இது தேவையற்ற பாரபட்சம் அல்லது கோபத்தை உருவாக்கும்.