
குழந்தைகளுக்குப் பால் கொடுப்பது எவ்வளவு முக்கியம் என்று அனைவருக்கும் தெரியும். பொதுவாக தாய்மார்கள் குழந்தைகிலுக்கு காலை, மற்றும் மாலை நேரங்களில் பால் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
குழந்தைகள் பால் கொடுப்பதால் அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சி நன்றாக இருக்கும். பாலில் புரதம், கால்சியம், வைட்டமின்கள் உள்ளன, இவை அவர்களின் ஆரோக்கியத்தை மேம் படுத்தும்.
ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் பால் கொடுத்தால் அவர்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும் என கூறுகிறார்கள். எந்த நேரத்தில் குழந்தைகள் பால் குடிக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
காலையில் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
காலையில் பால் குடித்தால் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் எனர்ஜி கிடைக்கும். ஆனால் வெறும் வயிற்றில் பால் குடித்தால் சில குழந்தைகளுக்கு அசிடிட்டி பிரச்சனை ஏற்படலாம், சில சமயங்களில் வாந்தி வரலாம். அதனால் சிற்றுண்டியுடன் பால் கொடுப்பது நல்லது. இது அவர்களின் மூளை செயல்பாட்டைமேம்படுத்தும். பள்ளிக்குச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் பால் கொடுக்கலாம்.
இரவில் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
இரவில் சூடான பால் குடித்தால் குழந்தைகளின் தூக்கத்தின் தரம் மேம்படும். பாலில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது குழந்தைகளின் மனதை அமைதிப்படுத்தி நல்ல தூக்கத்திற்கு உதவும். இரவில் பால் குடிப்பதால் செரிமானம் மேம்படும், தூங்குவதற்கு முன் பால் குடித்தால் கால்சியம் உறிஞ்சுதல் சிறப்பாக இருக்கும், எலும்புகள் வலுவாகும். தசைகளுக்கு ஓய்வு கிடைத்து, சோர்வு நீங்கும்.
நிபுணர்களின் கூற்றுப்படி, இரவில் பால் கொடுப்பது நல்லது. இதனால் உடலில் கால்சியம் உறிஞ்சுதல் அதிகரிக்கும். காலையை விட இரவில் பால் குடிப்பதால் அதிக நன்மைகள் உள்ளன. ஆனால் உங்கள் குழந்தை நாள் முழுவதும் சுற்றித் திரிந்தால், காலையில் சிற்றுண்டியுடன் அரை அல்லது ஒரு டம்ளர் பால் கொடுக்கலாம்.
குளிர்ந்த பால் அல்லது சூடான பால் எது நல்லது?:
குழந்தைகளுக்கு எந்த வகையான பால் கொடுக்க வேண்டும்? இரவில் பால் கொடுத்தால் சிறிது சூடான பால் கொடுங்கள். காலையில் ஸ்மூத்தி அல்லது ஷேக் செய்து கொடுக்கலாம். குழந்தைக்கு அசிடிட்டி அல்லது வயிற்று உப்புசம் இருந்தால், சாப்பிட்ட பிறகு அரை டம்ளர் குளிர்ந்த பால் கொடுக்கலாம், இது அசிடிட்டியைக் குறைக்க உதவும்.