ரக்‌ஷா பந்தன் : உங்கள் சகோதரிக்கு வழங்கப்போகும் சிறந்த கிஃப்ட் என்ன? இங்க வாங்க பாக்கலாம்!

First Published Aug 10, 2022, 11:52 AM IST

அண்ணன் தங்கை இடையே அன்பும் பாதுகாப்பும் பகிரப்படும் நாளாக இந்த ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. இந்நாளால் தங்கையானவன், தான் அண்ணனாக கருதும் நபருக்கு ஒரு பாசக் கயிற்றை (ராக்கி கயிறு) கட்டி தன் அன்பை வெளிப்படுத்துகிறாள். தங்கை கட்டும் புனிதக் கயிற்றின் அடையாளமாக தான் என்றும் உனக்கு பாதுகாப்புடன் இருப்பேன் என அண்ணன் உறுதியளித்து அதன் அடையாளமாக ஒரு அன்புப் பரிசை அளிக்கிறார்.
 

ரக்‌ஷா பந்தன் (ராக்கி கயிறு)

அண்ணன் தங்கை இடையே அன்பும் பாதுகாப்பும் பகிரப்படும் நாளாக இந்த ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தங்கையானவள், தான் அண்ணனாக கருதும் நபருக்கு ஒரு பாசக் கயிற்றை (ராக்கி கயிறு) கட்டி தன் அன்பை வெளிப்படுத்துகிறாள். தங்கை கட்டும் புனிதக் கயிற்றின் அடையாளமாக தான் என்றும் உனக்கு பாதுகாப்புடன் இருப்பேன் என அண்ணன் உறுதியளித்து அதன் அடையாளமாக ஒரு அன்புப் பரிசை அளிக்கிறார்.

நாளை ரக்‌ஷாபந்தன் கொண்டாடப்பட உள்ளநிலையில், உங்கள் தங்கைக்கு நீங்கள் என்ன பரிசு கொடுக்கப் போகிறீர்கள். தங்கைகளே உங்கள் அண்ணனிடம் இருந்து என்ன பரிசை கேட்கப்போகிறீர்கள். உங்களுக்கான சின்ன சின்ன ஐடியாக்கள் இங்கே கொண்டுக்கப்பட்டுள்ளது.

நவீன காலத்தில் ரக்‌ஷாபந்தன் எப்படி கொண்டாடலாம்? சில ஐடியாக்கள்!
 

கேஜட்ஸ்

கேஜட்ஸ் : இன்றைய ஸ்மார்ட் உலகில் அனைத்தும் கேஜட்ஸ் மயம் தான். உங்கள் அன்பு தங்கைக்கு ஒரு அழகான ஸ்மார்ட் வாட்ச், மொபைல்போன் போன்ற பரிசுப் பொருட்களை அளிக்கலாம். இதன் மூலம் எந்த சூழ்நிலையிலும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய முடியும்.

சாக்லேட்

சாக்லேட் ; இது பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. இன்று வித விதமாக பல வகை சாக்லேட்டுகள் கடைகளில் கிடைகின்றன. மேலும் இணையதள கடைகளிலும் பல வகை வெளிநாட்டு சாக்லேட்டுகள் கிடைகின்றனர். அதில் உங்கள் பிடித்த ஒன்றை தேர்வு செய்து பரிசளிக்கலாம்.

அழகு நகைகள்

அழகு நகைகள் ; இத்தகைய பரிசுகள் உங்கள் தங்கைக்கு மட்டும் பிடித்தமான விதத்தில் நீங்களே வடிவமைத்து வாங்கலாம். இத்தகைய பரிசுகள் நிச்சயம் உங்கள் தங்கையை மகிழவைப்பதோடு, தான் உங்களுக்கு ஒரு முக்கியமானவள் என்கின்ற உணர்வையும் அவளுக்குள் ஏற்படுத்தும்.

சமையல் பொருட்கள்

சமையல் பொருட்கள் ; உங்கள் தங்கைக்கு சமையல் செய்வது அதிகம் பிடிக்கும் என்றால், அது சார்ந்த பொருட்களை நீங்கள் பரிசளிக்கலாம். குறிப்பாக ஏலேக்ட்ரோனிக் சமையல் உபகரணங்கள், காய் வெட்டும் உபகரணங்கள், மிக்ஸ்சர் ஜூசர், என்று பயனுள்ள ஒரு பொருளை பரிசளிக்கலாம்.

அழகு சாதன பொருட்கள்

அழகு சாதன பொருட்கள் ; இன்று பெரும்பாலான பெண்கள் அழகு சாதன பொருட்கள் பயன் படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுகின்றனர். அந்த வகையில் நீங்கள் உங்கள் தங்கைக்கு நல்ல தரமான அழகு சாதன பொருட்களை பரிசாகத் தரலாம்.

click me!