Dandruff Home Remedies: தலையில் பொடுகை ஓட ஓட விரட்டும் பாதாம் எண்ணெய்...எப்படி பயன்படுத்துவது தெரியுமா..?

Published : Aug 10, 2022, 06:03 AM IST

Dandruff Home Remedies: பொடுகு பிரச்சனையை தீர்க்க பல இயற்கையான வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 

PREV
15
Dandruff Home Remedies: தலையில் பொடுகை ஓட ஓட விரட்டும் பாதாம் எண்ணெய்...எப்படி பயன்படுத்துவது தெரியுமா..?
Dandruff Home Remedies:

கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று பொடுகு பிரச்சனையாகும். பொதுவாக குளிர் காலத்தில் இந்த பொடுகு தொல்லை ஒருவரை பாடாய் படுத்தும்.
பொடுகு பிரச்சனை அதிகமாக இருக்கும் போது, சில நேரங்களில் வெளியே செல்வதற்கு கூட யோசிப்பது உண்டு. பொடுகு பிரச்சனை உண்டாக பல்வேறு காரணங்கள் உள்ளன. இதை சரி செய்ய பலர் பலவித ரசாயனம் கலந்த பொருட்களையும் பயன்படுத்துகிறார்கள். எனினும் இவற்றில் தீமையே அதிகமாக ஏற்படுகின்றது. சிலருக்கு பொடுகு காரணமாக அரிப்பு ஏற்படும். எனவே, பொடுகு பிரச்சனையை தீர்க்க பல இயற்கையான வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

 மேலும் படிக்க..Sani Peyarchi 2022: சனியின் வக்ர பெயர்ச்சி...இன்னும் இரண்டு வருடங்களுக்கு இந்த ராசிகளுக்கு குபேர யோகம் உண்டு..

25
Dandruff Home Remedies:

பாதாம் எண்ணெய்:

பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ, புரோட்டீன் மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகம் இருக்கிறது..இது முடியின் வேர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது முடியை பளபளப்பாக மாற்றும். பாதாம் எண்ணெயைக் கொண்டு முடியை மசாஜ் செய்தால், பொடுகு பிரச்சனை மற்றும் கூந்தலில் ஏற்படும் பிற பிரச்சனைகள் நீங்கும். ஆனால், பாதாம் எண்ணெயில் சில பொருட்களைக் கலந்து பயன்படுத்தினால், தலைமுடி உறுதியாவதுடன் பளபளப்பாகவும் இருக்கும். 

 பாதாம் எண்ணெயுடன் இந்த 2 பொருட்களை கலக்கவும்

35
Dandruff Home Remedies:

எலுமிச்சை சாறு

பாதாம் எண்ணெயுடன் எலுமிச்சைச் சாற்றை கலந்து பயன்படுத்தினால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். 

தேங்காய் பால்:

பாதாம் எண்ணெயுடன், தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை தலையில் நன்றாக தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை  அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தல் பள பளக்கும்.

45
Dandruff Home Remedies:

வாழைப்பழம்:

பாதாம் எண்ணெயுடன் வாழைப்பழத்தை கலந்தால், இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம். இதனால், தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு குறையும்.  

முட்டை:

பாதாம் எண்ணெயுடன், முட்டை வெள்ளைக் கரு, தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு  குறையும். 

 மேலும் படிக்க..Sani Peyarchi 2022: சனியின் வக்ர பெயர்ச்சி...இன்னும் இரண்டு வருடங்களுக்கு இந்த ராசிகளுக்கு குபேர யோகம் உண்டு..

55
Dandruff Home Remedies:

செய்முறை விளக்கம்:

இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் சில துளிகள் பாதாம் எண்ணெய் எடுத்து கொள்ளவும். அதனுடன்  சில துளிகள் எலுமிச்சை எண்ணெய் கலந்து உங்கள் தலைமுடியில் தடவ வேண்டும். 
 
பிறகு 10- 15 நிமிடம் ஊற வைத்து மசாஜ் செய்த பிறகு, ஷாம்பு தேய்த்து குளிக்கலாம். இப்படி செய்வதன் மூலம் முடி வளர்ச்சியும் வேகமாக நடக்கும்.

 மேலும் படிக்க..Sani Peyarchi 2022: சனியின் வக்ர பெயர்ச்சி...இன்னும் இரண்டு வருடங்களுக்கு இந்த ராசிகளுக்கு குபேர யோகம் உண்டு..

Read more Photos on
click me!

Recommended Stories