Fridge : ஃபிரிட்ஜுக்கும் சுவருக்கும் எவ்வளவு கேப் வேணும்? இது தெரிஞ்சா கரண்ட் பில் குறையும்!

Published : Jun 30, 2026, 12:34 PM IST

Fridge Placement : கோடைக்காலத்தில் ஃபிரிட்ஜ் பயன்பாடு அதிகம். ஆனால், அதை சரியான இடத்தில் வைக்கவில்லை என்றால், உங்கள் கரண்ட் பில் எகிறிவிடும்! ஃபிரிட்ஜ் நீண்ட காலம் உழைக்கவும், கரண்ட் பில்லைக் குறைக்கவும் சில சிம்பிள் டிப்ஸ் இதோ.

PREV
14
Tips for Fridge Placement

வெயில் காலங்களில் ஒவ்வொரு வீட்டிலும் கரெண்ட் பில் அதிகம் வரும். அதற்கு முக்கிய காரணம் வீட்டில் உள்ள சில பொருட்கள் தான். குறிப்பாக இந்த வெயில் காலங்களில் வீட்டில் ஏசி மற்றும் ஃபிரிட்ஜை தான் அதிகம் பயன்படுத்துவார்கள். வெயில் காலங்களில் குளிர்ச்சியாக ஏதாவது குடிக்க வேண்டும் என ஆசைப்படுவோம். அதற்கு ஃபிரிட்ஜ் தான் நமக்குக் கைகொடுக்கும். அந்த ஃபிரிட்ஜை சரியாக பயன்படுத்தினால் அது கம்மியான கரெண்டை மட்டும் இழுக்கும். அதற்கு ஒரு சின்ன விஷயத்தை செய்தால் மட்டும் போதும்.

24
இடைவெளி ஏன் முக்கியம்?

வீட்டில் ஃபிரிட்ஜுக்கும் சுவருக்கும் சரியான இடைவெளி விடவில்லை என்றால், கரண்ட் பில் எகிறி, ஃபிரிட்ஜும் சீக்கிரம் பழுதாகிவிடும். ஃபிரிட்ஜ் சரியாக வேலை செய்ய, அதைச் சுற்றி காற்றோட்டம் (Ventilation) சீராக இருக்க வேண்டும். காற்றோட்டம் இருந்தால் தான் ஃபிரிட்ஜில் எந்தவித பாதிப்பும் ஏற்படமால் இருக்கும். ஃபிரிட்ஜுக்கும் சுவருக்கும் இடையே இடைவெளி இல்லையென்றால், பல சிக்கல்கள் ஏற்படும். அது உங்களுக்கு மாத மாதம் கரெண்ட் பில் அதிகமாவதோடு, ஃபிரிட்ஜும் சீக்கிரம் பழுதாகிவிடும்.

34
இடைவெளி விடாவிட்டால் என்னென்ன பிரச்சனை வரும்?

ஃபிரிட்ஜுக்கும் சுவருக்கும் இடையே போதிய இடைவெளி இல்லாவிட்டால், ஃபிரிட்ஜின் கம்ப்ரெசர் சூடாகி, குளிர்விக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால், கம்ப்ரெசர் மீது அழுத்தம் அதிகரித்து, மின்சாரப் பயன்பாடு கூடும். நாளடைவில், ஃபிரிட்ஜின் கூலிங் திறன் குறைந்து, அது சீக்கிரம் பழுதாகிவிடும். ஃபிரிட்ஜில் இருந்து வெளியேறும் வெப்பம், சுவரில் பட்டு மீண்டும் ஃபிரிட்ஜ் பக்கமே வராமல் இருக்க, குறைந்தபட்சம் 1 முதல் 2 இன்ச் வரை ஃபிரிட்ஜுக்கும் சுவருக்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டும். இது மிகவும் அவசியம்.

44
பராமரிப்பது அவசியம்

உங்கள் வீட்டில் அதிக இடம் இருந்தால், இந்த இடைவெளியை இன்னும் கொஞ்சம் அதிகரிப்பது நல்லது. இது ஃபிரிட்ஜை சுற்றி காற்று தாராளமாகச் செல்ல உதவும். ஃபிரிட்ஜின் பின்பக்கத்தில் உள்ள காயில்களில் (Coils) தூசி சேராமல், அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள். தூசி அதிகமாகச் சேர்ந்தால், ஃபிரிட்ஜ் சூடாகி, குளிர்விக்க அதிக மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். மாத மாதம் இதையெல்லாம் கவனித்தால், உங்கள் ஃபிரிட்ஜின் ஆயுட்காலம் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி உங்கள் வீட்டு கரெண்ட் பில்லும் கம்மியாகும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories