
தை பொங்கல் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாகும். ஆண்டு தைப்பொங்கல் ஜனவரி 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை என்று வருகிறது. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். பொங்கள் பண்டிகை அறுவடை திருநாள் என்பதால், நல்ல அறுவடை தந்த சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தான் இந்த பண்டிகையை மக்கள் மிகுந்த சந்தோஷத்துடன் கொண்டாடுகிறார்கள்.
எனவே, இதற்காக மக்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடனே தயாராகி வருகின்றனர். இதனால் பலர் தங்களது வீட்டை சுத்தம் செய்து, வெள்ளை அடித்து, மாவிலை தோரணங்கள் கட்டி அலங்கரித்து இருப்பார்கள். இதுதவிர பொங்களுக்கு என்ன கோலம் போட வேண்டும் என்று முன்கூட்டியே யோசித்து வைத்திருப்பார்கள். ஏனெனில் பொங்கலுக்கு என்ன கோலம் போட்டு வீட்டை அழகாக காட்ட வேண்டும் என்பதுதான் பெண்களுக்கு இருக்கும் மிகைப்பு பிரச்சனைகளில் ஒன்றாகும். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அப்பார்ட்மெண்டில் வசிக்கிறீர்களா? உங்கள் வாசனை அழகாக்க இங்கு சில கோலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவற்றில் ஏதேனும் உங்களுக்கு பிடித்திருந்தால் அதை தேர்வு செய்து உங்கள் வாசலில் கோலம் போடுங்கள்.
மயில் கோலம்:
இந்த கோலம் பார்ப்பவர்களின் கண்களை கவரும் விதமாக இருக்கும். மேலும் இந்தக் கோலம் ரொம்ப போடுவது ரொம்பவே சுலபமாகவும் இருக்கும். இந்த கோலத்தில் நீங்கள் விரும்பிய கலர் பொடியை பயன்படுத்தி, உங்கள் வாசலை அழகுப்படுத்தலாம்.
புள்ளி கோலம்:
புள்ளி கோலம் எல்லாராலும் எளிதில் போட முடியும். அந்த அளவிற்கு இந்த கோலம் ரொம்பவே சுலபமாக இருக்கும். உங்களுக்கு எந்த டிசைனில் கோலம் போட விருப்பம் இருக்கிறதோ, அதற்கு ஏற்றார் போல புள்ளிகளை வைத்து கோலம் போடுங்கள்.
இதையும் படிங்க: Pongal Pulli Kollam Designs 2025 : பொங்கலோ.. பொங்கல்.. வித விதமான புள்ளி கோலங்கள் டிசைன்கள் இதோ!
மாடல் கோலம்:
பார்ப்பதற்கு சிம்பிளாகவும், கூடவே மார்டனாகவும் இருக்கும் கோலத்தை நீங்கள் விரும்பினால் இந்த கோலம் போடுங்கள். இந்தக் கோலத்தில் நீங்கள் விரும்பிய கலர் பொடியை பயன்படுத்தி உங்கள் வாசலை அழகாக்கலாம்.
இதையும் படிங்க: இப்படி 'கோலம்' போடாவிட்டால் கடன் பெருகும் தெரியுமா? இந்த தவறை செய்யாதீங்க!
ரோஜாப்பூ வைத்து கோலம்:
இந்த கோலத்தை முதலில் நீங்கள் அரிசி மாவு போட்டு, பிறகு நீங்கள் விரும்பிய கலர் முடியை நிரப்பி, இறுதியாக கோலத்தின் மேல் ரோஜா பூக்களை வைத்து அலங்கரிக்கவும். இந்தக் கோலமும் பார்ப்பதற்கு ரொம்பவே அழகாக இருக்கும்.