you can come to street from the money plant
நாம் நீண்ட நாட்கள் நோய் நொடிகள் இன்றி ஆரோக்கியமாக வாழ சுத்தமான காற்றும், சுத்தமான தண்ணீரும் சம அளவில் முக்கிய பங்கு அளிக்கின்றன. நாம் பருகும் தண்ணீரை சுத்திகரிக்க நம் வீடுகளில் RO எனப்படும் இயந்திரத்தின் துணையுடன் சுத்திகரிப்பு செய்து தண்ணீரை அருந்துவோம்.
அதே போன்று நாம் சுவாசிக்கும் காற்றை சுத்திகரிக்க நமது வீட்டைச் சுற்றி சில செடிகளை வளர்த்து வருவதன் மூலம் காற்றை சுத்திகரிக்கலாம். அவை என்னென்ன செடிகள் என்பதனை இந்த பதிவின் மூலம் தெரிந்து .கொள்ளலாம்.
கற்றாழை:
நமது தோல் சார்ந்த பிரச்னைகளுக்குக் கற்றாழை மிகச் சிறந்த தீர்வை தரும் என்பதனை நாம் அறிவோம். அதனை அதனை தவிர காற்றை சுத்திகரிக்கும் செயலையும் மிகச் சிறந்த வகையில் செய்கிறது. இதனை வீட்டில் வளர்ப்பதால் காற்றின் தரம் உயரும், மேலும் சிறந்த மூலிகையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நாம் சுவாசிக்கும் காற்றை எப்போதும் புத்துணர்ச்சியாக மாற்றும் தன்மை கொண்டது.
எலுமிச்சைப் புல் :
இந்த எலுமிச்சைப் புல் செடியில் சிட்ரல் எனப்படும் வேதிப் பொருள் இருப்பதால் காற்றில் நம் கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்களை அழிக்கக் கூடியதாக இருக்கிறது. தவிர இந்த செடி கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது. தவிர இது ஒரு இயற்கை கொசு விரட்டியாகவும் இருக்கிறது
புதினா:
சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் புதினா மருத்துவத்திலும் ஒரு சிறந்த பங்கை தருகிறது. மேலும் இது விரைவாக வளரக் கூடிய தாவரம் கூட . இதனை வீட்டில் வளர்ப்பதால் காற்றில் நல்லதொரு புத்துணர்ச்சி கிடைக்கும். தவிர ஈ, எலிகள் மற்றும் எறும்புகள்போன்றவைகளின் தாக்கத்திலிருந்தும் பாதுகாக்கும்.
நீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்திகரித்து, புத்துணர்ச்சியை தரும் இந்த செடிகளை நீங்களும் உங்களது வீடுகளில் வளர்த்து பயன் அடையுங்கள்!