Kids Eye Care Tips : உங்க குழந்தைக்கு 'அப்படி' ஆகக் கூடாது!! கண் பார்வை பிரச்சனையைத் தடுக்கும் பழக்கங்கள்

Published : Jul 03, 2025, 04:14 PM IST

குழந்தைகளுக்கு ஏற்படும் கண் பார்வை பிரச்சனைகளை எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை இங்கு காணலாம்.

PREV
18
குழந்தைகளின் கண் பார்வை பிரச்சனையை எப்படி தடுப்பது?

சில விஷயங்கள் குழந்தைகளுடைய கண் பார்வையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும். அதிகப்படியான திரை நேரம், ஊட்டச்சத்து இல்லாத உணவு, போதுமான உடல் செயல்பாடு இல்லாதது, மரபியல் காரணங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குழந்தைகளின் கண் பார்வை பாதிக்கிறது. இந்தப் பதிவில் குழந்தைகளுடைய உணவு முறை, கண் பார்வையை பாதிக்கும் மற்ற விஷயங்களை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பது குறித்து காணலாம்.

28
திரை நேரம்

குழந்தைகள் டிவி, செல்போன், கணினி போன்ற டிஜிட்டல் சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். அதிக நேரம் டிஜிட்டல் சாதனங்களை காண்பதால் கண்களில் அழுத்தமும், கிட்ட பார்வை பிரச்சனையும் ஏற்படக்கூடும். இதைத் தவிர்க்க குழந்தைகளின் திரை நேரத்தை குறைக்க வேண்டும். 20 -20-20 என்ற விதியை குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறையும் டிஜிட்டல் சாதனங்க பயன்படுத்தும்போது இடைவெளிகள் விட வேண்டும்.

38
கண்ணுக்கு ஏற்ற வெளிச்சம்

குழந்தைகளின் கண்களை கூச செய்யாத வகையில் அமைத்த விளக்கு வெளிச்சத்தில் படிக்க வைக்க வேண்டும். படிப்பது, வீட்டுப்பாடம் எழுதுவது போன்றவற்றை மோசமான வெளிச்சத்தில் செய்வதால் குழந்தைகளின் கண்கள் சோர்வடைந்து தலைவலி, சோர்வு ஏற்படலாம். பகல் வெளிச்சம் அல்லது கண்களுக்கு ஏற்ற மென்மையான செயற்கை வெளிச்சத்தில் குழந்தைகளை படிக்க சொல்லலாம்.

48
கண் பயிற்சிகள்

குழந்தைகளுக்கு எளிய கண் பயிற்சிகளை சொல்லிக் கொடுக்கலாம். அடிக்கடி கண்களை சிமிட்டுவது, கண்களை மேலே கீழே அசைப்பது, கண்களை உருட்டுவது, பார்வையை தூரத்திலிருந்து அருகிலும், அருகில் இருந்து தூரத்திலும் மாற்றுதல் போன்ற கண் பயிற்சிகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது நல்லது. இது கண்களில் தசைகளை வலுப்படுத்துவதோடு சோர்வையும் குறைக்கும். அதிக நேரம் படிக்கும் குழந்தைகளுக்கு இந்த பயிற்சிகள் மிகவும் அவசியமானது. திரைநேரத்தை அதிகம் கொண்டுள்ள குழந்தைகளும் நிச்சயம் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்.

58
உணவு பழக்கம்

கண் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வைட்டமின்கள் ஏ, சி, ஈ, துத்தநாகம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை அவசியம். இந்த சத்துக்கள் கேரட், கீரைகள், கோஸ், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, முட்டை, பாதாம் பிஸ்தா போன்ற கொட்டைகள், மீன் ஆகியவற்றில் உள்ளன. இவற்றை குழந்தைகளின் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது அவர்களுக்கு கண் பிரச்சனை வராமல் தவிர்க்க உதவுகிறது.

68
நல்ல தூக்கம்

கண்களுக்கும் போதுமான ஓய்வு தேவைப்படுகிறது. குழந்தைகள் கண் ஆரோக்கியத்தை நன்றாக பராமரிக்க வேண்டும் என்றால் தூக்கம் அவசியமாகிறது. போதுமான தூக்கம் இல்லாத குழந்தைகளுடைய கண்கள் வறட்சியாகவும், சோர்வாகவும் காணப்படும். இது காலப்போக்கில் மோசமான பார்வையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் படுக்கைக்கு சென்று தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

78
தண்ணீர் தண்ணீர்!!

குழந்தைகளுக்கு அதிகமான நீரிழப்பு ஏற்பட்டால் அவர்களுடைய கண்களில் வறட்சி ஏற்படும். ஒரு நாள் முழுக்க போதுமான தண்ணீர் குடிக்காத குழந்தைகளுக்கு விரைவில் கண்களில் பிரச்சனை ஏற்படும். குழந்தைகள் தண்ணீர் நிறைய குடிப்பதை பெற்றோர் உறுதி செய்வது அவசியம். இது அவர்களுடைய கண்களை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது.

88
சுத்தம்

குழந்தைகள் மண்ணில் விளையாடும் பழக்கம் உடையவர்கள். கண்ட இடங்களில் கைகளை வைப்பது அவர்களுடைய இயல்பு. அவர்களுக்கு அடிக்கடி கைகளும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அழுக்கு கைகளால் கண்களை தொடக்கூடாது என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அழுக்கு கைகளால் அடிக்கடி கண்களில் தேக்கும்போது வெண்படல நோய்கள் வர வாய்ப்புள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories