Published : Sep 02, 2022, 10:22 AM ISTUpdated : Sep 02, 2022, 10:23 AM IST
Vastu Tips- Mother Lakshmi stays at home Do this method: வீடு மகாலட்சுமி கடாட்சத்தோடு இருக்க நம்முடைய நிலை வாசல் படியில் நாம் எத்தகைய தவறை செய்ய கூடாது என்பது பற்றி, நாம் இந்த பதிவில் தெளிவாக தெரிந்து வைத்து கொள்வோம்..
உங்கள் வீட்டின் நிலை வாசலில் இந்த தவறை மட்டும் மறந்தும் கூட செய்தால், வீட்டில் தொடர் பிரச்சினைகளும், சுபகாரிய தடையும், கடன் தொல்லைகளும் நிச்சயம் இருக்கும். எனவே, சில நேரம் நம்முடைய வாழ்வில் வரும், கஷ்ட நஷ்டங்களுக்கு நாமே முக்கிய காரணமாக இருப்போம்..
ஒருவர் ஜாதகத்தில் குரு எவ்வளவு முக்கியமோ, அதே போல தான் ஒரு வீட்டின் நிலை வாசலும் லட்சுமி கடாட்சத்துடன் இருக்க வேண்டியது அவசியம்..எனவே, வீடு மகாலட்சுமி கடாட்சத்தோடு இருக்க அத்தகைய நிலை வாசல் படியில் நாம் எத்தகைய தவறை செய்ய கூடாது என்பது பற்றி, நாம் இந்த பதிவில் தெளிவாக தெரிந்து வைத்து கொள்வோம்..
Vastu Tips- Mother Lakshmi stays at home Do this clean
நம்முடைய வீடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால் முதலில் நாம் கவனிக்க வேண்டிய இடம் நிலை வாசல். ஆனால், பெரும்பாலானோர் நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் தான் செருப்பை கழட்டி விட்டு வருவோம். மேலும், அந்த இடத்தை அசுத்தமாக வைத்து இருப்போம்.
46
Vastu Tips- Mother Lakshmi stays at home Do this clean
சில வீடுகளில் நிலை வாசலுக்கு ரொம்பவும் அருகிலேயே இரும்பில் செருப்பு வைக்கும் ஸ்டாண்ட் இருக்கும். நிலை வாசலுக்கு மிக மிக அருகில் செருப்பு ஸ்டாண்ட் வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். முடிந்த வரை செருப்பு ஸ்டாண்ட் இரும்பில் இருக்க வேண்டாம். பிளாஸ்டிக்கிலும் இருக்க வேண்டாம். மரக்கட்டையால் செருப்பு ஸ்டான்ட் தயார் செய்து கொள்வது நல்லது.
அதேபோன்று, செருப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கக் கூடாது. ஒரு செருப்பு கவிழ்ந்து, ஒன்று நிமிர்ந்தும் இருக்கக் கூடாது. சரியாக இரண்டு செருப்பையும் ஜோடி கலையாமல் அடுக்கி வைக்க வேண்டும்.
56
Vastu Shastra 2022
அதேபோன்று, நிலை வாசல் கதவில் கூடுமானவரை தெய்வங்களின் படத்தை வைக்க வேண்டாம். நிலை வாசல் கதவு என்பது தினசரி நாம் பயன்படுத்தக்கூடிய ஒரு கதவு. அதை திறப்பது மூடுவதுமாகத் தான் இருக்கப் போகிறோம். தெய்வத்தின் திரு உருவப் படத்தை ஒரு இடத்தில் வைத்துவிட்டு, அதை இந்த பக்கமும் அந்த பக்கமும் அலைபாய விடக்கூடாது. இது வீட்டிற்கு நல்லது அல்ல.
அதேபோன்று, நிலை வாசல், பகுதியில் எப்போதும் துர்நாற்றம் வீச கூடாது. எனவே, அந்த இடத்தில் நல்ல வாசம் வீச ஒரு சிறிய கிண்ணத்தில் பச்சை கற்பூரம், துளசி போட்டு அதில் நல்ல தண்ணீரை நிரப்பி வையுங்கள். கூடவே இந்த தண்ணீரில் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டு வைப்பது மிகவும் நல்லது. இது உங்களுக்கு லட்சுமி கடாட்சத்தை நிறைவாக கொண்டு வந்து சேர்க்கும். இந்த விஷயங்களை நீங்கள் பின்பற்றி பார்த்தாலே மகாலக்ஷ்மி கடாட்சம் தானாக வீட்டிற்குள் நுழையும்.