World Coconut Day 2022: இன்று உலக தேங்காய் தினம்: தேங்காயின் 5 ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நன்மைகள்..!

First Published | Sep 2, 2022, 9:42 AM IST

World Coconut Day 2022: இன்று செப்டம்பர் 2ஆம் தேதி 24ஆவது உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தேங்காயின் 5 ஆரோக்கிய மற்றும் ஊட்டச்சத்து நன்மைகளை இங்கு பார்க்கலாம்.

World Coconut Day 2022:

இன்று செப்டம்பர் 2ஆம் தேதி 24ஆவது உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. தென்னை சாகுபடி செய்யும் நாடுகளில், தென்னை மரத்தின் பலன்கள், அதன் மூலம் விவசாயிகள் அடையக்கூடிய லாபம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே ஆண்டுதோறும் இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

 மேலும் படிக்க..National Nutrition Week 2022: தேசிய ஊட்டச்சத்து வாரம் 2022...உங்கள் வயதிற்கு ஏற்ப டயட் லிஸ்ட் என்ன தெரியுமா..?

World Coconut Day 2022:

ஆசியா முழுவதும் தென்னை பரவலாக இருந்தாலும், இலங்கை, இந்தியாவில் குறிப்பாக தமிழகம், கர்நாடகம் ஆந்திரா மற்றும் கேரளாவில் 90 சதவீதம் சாகுபடியாகிறது. தேங்காயின் அடி முதல் நுனி வரை அத்தனை உறுப்பும் மனிதனுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. பாதாம், முந்திரி, பிஸ்தாவுக்கு இணையான ஊட்டச்சத்து தேங்காயில் உள்ளது. அறுபது ஆண்டுகள் வாழும், தென்னை ஐந்து ஆண்டுகளில் மகசூல் தரக்கூடியது. 

 மேலும் படிக்க..National Nutrition Week 2022: தேசிய ஊட்டச்சத்து வாரம் 2022...உங்கள் வயதிற்கு ஏற்ப டயட் லிஸ்ட் என்ன தெரியுமா..?

Tap to resize

World Coconut Day 2022:

இந்தியாவின் மொத்த தேங்காய் விளைச்சலில் 40 சதவீதம் பொள்ளாச்சியில் உள்ளது. இங்கு உற்பத்தியாகும்  தேங்காயில் இருந்து மட்டும் எண்ணெய், மருத்துவம், உணவு, சோப், அழகு சாதனப் பொருள் போன்றவை தயாரிக்கப்படுகிறது..

World Coconut Day 2022:

தேங்காயின் ஆரோக்கிய நன்மைகள்:

1. தேங்காயில் உள்ள மாங்கனீசு எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது..மேலும், இது கார்போஹைட்ரேட், புரதங்கள் மற்றும் கொலஸ்ட்ரால் வளர்சிதை மாற்றத்திற்கும் அவசியம்.

2.  உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் தன்மை உடையது. குறிப்பாக, மலச்சிக்ககல், வயிறு உப்புசம், வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் போன்றவற்றை குணப்படுத்தும்.  

3. தேங்காயில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் கொழுப்பு அதிகமாகவும் உள்ளது. எனவே இது உங்கள் இரத்த சர்க்கரையை சீராக்க உதவும். 

World Coconut Day 2022:

4. ஆண்மை குறைபாட்டினை நீக்கும். தாய்ப்பால் சுரப்புக்கு உதவும். மேலும், உடலுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். சருமத்தின் அழகைக் மேலும் கூட்டும்.

5. தேங்காயில் இருக்கும் அதிக நார்ச்சத்து, செரிமானத்தை மெதுவாக்கவும். மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை அளவையும் சீராக்கவும் உதவும்.

6. தேங்காயில் இருக்கும் இளநீர், சிறுநீர் தொற்று ஏற்படுவதின் அபாயத்தை குறைக்கிறது. சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகப் பாதையைச் சுத்தப்படுத்தும். சிறுநீரகக்கல் பிரச்னை, பெரியம்மை நோய்கள் வராமல் தடுக்கும்.  

 மேலும் படிக்க..National Nutrition Week 2022: தேசிய ஊட்டச்சத்து வாரம் 2022...உங்கள் வயதிற்கு ஏற்ப டயட் லிஸ்ட் என்ன தெரியுமா..?

Latest Videos

click me!