Grey Hair: கெமிக்கல் டை வேண்டாம்! நரைமுடியை இயற்கை முறையில் கருப்பாக்க ஆசையா? இதோ வழி!

Published : Jun 01, 2026, 02:47 PM IST

Grey Hair: வயசாகும்போது வர்ற நரை முடியை மறைக்க கெமிக்கல் டை யூஸ் பண்றீங்களா? இனி அது வேண்டாம். நம்ம வீட்டுல இருக்கிற நெல்லிக்காய் பொடியை வெச்சே இயற்கையான முறையில முடியை கருப்பாக்கலாம். எப்படின்னு பார்க்கலாம் வாங்க.

PREV
15
இனி உங்க முடி கலரு கருப்பாக மாறும்
வயசாகும்போது நரை முடி வர்றது இயல்புதான். ஆனா, அதை மறைக்க மார்க்கெட்ல கிடைக்கிற கெமிக்கல் டை பயன்படுத்தினா, முடி இன்னும் டேமேஜ் ஆகும். அதுக்கு பதிலா, இயற்கையான முறையில முடியை கருப்பாக்கலாம். அதுக்கு நம்ம நெல்லிக்காயே போதும்.
25
முடி இன்னும் அடர்த்தியா, கருமையா மாறும்
நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், மற்றும் டானின்கள் நிறைஞ்சிருக்கு. இது முடியில் மெலனின் அளவை அதிகரித்து, முடி கருப்பாக மாற உதவுது. இதோட, மருதாணி (ஹென்னா), அவுரி பொடி (இண்டிகோ) சேர்க்கும்போது, முடி இன்னும் அடர்த்தியா, கருமையா மாறும்.
35
தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் பொடி – 2 டேபிள்ஸ்பூன், 

மருதாணி பொடி – 1 டேபிள்ஸ்பூன், 

அவுரி பொடி (இண்டிகோ) – 1 டேபிள்ஸ்பூன், 

காபி/பிளாக் டீ தூள் – 1 டீஸ்பூன், 

தேங்காய்/விளக்கெண்ணெய் – 1 டீஸ்பூன், 

எலுமிச்சை சாறு – சில துளிகள், 

வெதுவெதுப்பான நீர்

செய்முறை: நெல்லிக்காய் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து 15 நிமிஷம் ஊறவைங்க. பிறகு மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து பேஸ்ட் மாதிரி ஆக்கி, 30 நிமிஷம் அப்படியே வச்சிடுங்க.

45
எலுமிச்சைக்கு பதிலா தயிர் அல்லது கற்றாழை ஜெல்
முதல்ல தலையை நல்லா அலசி, முடியை காய வச்சிடுங்க. முடியை சின்ன சின்னப் பகுதியா பிரிச்சு, வேரிலிருந்து நுனி வரை இந்த பேஸ்ட்டை அப்ளை பண்ணுங்க. ஒரு ஷவர் கேப் போட்டு, 2 மணி நேரம் அப்படியே விட்டுடுங்க. அப்புறம் வெறும் தண்ணியில தலையை அலசுங்க. மறுநாள் ஷாம்பு யூஸ் பண்ணலாம். வறண்ட முடி உள்ளவங்க, எலுமிச்சைக்கு பதிலா தயிர் அல்லது கற்றாழை ஜெல் யூஸ் பண்ணலாம்.
55
முடி இயற்கையான கருப்பு நிறத்துக்கு மாறிடும்
முதல்முறை பயன்படுத்தும்போது, முடி லேசான பிரவுன் நிறத்துல மாறும். ரெண்டு அல்லது மூணு முறை பயன்படுத்தின பிறகு, முடி இயற்கையான கருப்பு நிறத்துக்கு மாறிடும். இதனால முடிக்கு எந்த பாதிப்பும் வராது. முடி இன்னும் வலுவா, பளபளப்பா மாறும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories