National Nutrition Week 2022: தேசிய ஊட்டச்சத்து வாரம் 2022...உங்கள் வயதிற்கு ஏற்ப டயட் லிஸ்ட் என்ன தெரியுமா..?

First Published | Sep 2, 2022, 6:03 AM IST

National Nutrition Week 2022: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் சத்தான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதே இந்த வாரத்தில் முக்கிய நோக்கமாகும். உங்கள் வயதிற்கு ஏற்ப ஊட்டச்சத்து டயல் லிஸ்ட் என்ன என்பது பற்றி இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்..

national nutrition week 2022

தேசிய ஊட்டச்சத்து வாரம் 2022: 

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் வாரம் (செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை) தேசிய ஊட்டச்சத்து வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து நிறைந்த சமச்சீர் மற்றும் சத்தான உணவு நமது ஆரோக்கியத்திற்கு நீண்ட கால நன்மைகளைக் கொடுக்கும். இது உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு, இதயக் கோளாறுகள், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய் தொற்றுகளில் இருந்து தங்களை பாதுகாக்கிறது. எனவே, ஒவ்வொரு வயதினரும், ஒவ்வொரு விதமான டயட் முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். அவை என்ன என்பது பற்றி சில முக்கிய விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

National Nutrition Week

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து:

உணவு விஷத்தை பொறுத்த வரையில், காய்கறிகள், முட்டை, நட்ஸ், பால், இறைச்சி, வைட்டமின் சி, வைட்டமின் டி, இரும்புச் சத்து போன்ற உணவுகள் சேர்ப்பதன் மூலம் உணவின் தோற்றத்தை அழகுபடுத்தி அதன் மூலம் அவர்கள் நலமுடன் வாழ வழிவகுக்கும்..

Tap to resize

National Nutrition Week

பதின் பருவத்தினருக்கான ஊட்டச்சத்து

டீனேஜ் பருவத்தில் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் எப்போதும் ஒரு கண் இருக்க வேண்டும் என்பார்கள். ஏனெனில் வளரும் குழந்தைகளுக்கு வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் , அந்த வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்க வேண்டியதும் அவசியம். எனவே, இந்த வயதில் இளம் பருவத்தினரின் உணவில் ஊட்டச்சத்துக்கள், புரதங்கள், இரும்புச்சத்து தானியங்கள், பழங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.

 மேலும் படிக்க...Nutrition: தேசிய ஊட்டச்சத்து வாரம் 2022: மிஸ் பண்ணாமல் தினமும் சாப்பிட வேண்டிய 5 பெஸ்ட் ஊட்டச்சத்து உணவுகள்..!

20-முதல் 50 வயது வரை ஊட்டச்சத்து

இந்த வயதில் இருக்கும் போது தான் நமக்கு, ஆரோக்கியமான உணவுத் தேவைகளைப் புறக்கணிக்கவும், ருசியான ஆரோக்கியமற்ற அல்லது துரித உணவுகளில் ஈடுபடவும் வழிவகுக்கிறது. எனவே, இந்த வயதில் ஒருவர் ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்..இந்த வயதினர்  உணவில் பைட்டோநியூட்ரியன்கள, புரதங்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகளை சேர்ப்பது மிகவும் அவசியம். ஏனெனில், இவை உடலின் செரிமானம் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புகளை மேம்படுத்த உதவுகிறது.

 மேலும் படிக்க...Nutrition: தேசிய ஊட்டச்சத்து வாரம் 2022: மிஸ் பண்ணாமல் தினமும் சாப்பிட வேண்டிய 5 பெஸ்ட் ஊட்டச்சத்து உணவுகள்..!

முதுமை காலம்:

முதுமை காலத்தில் ஒருவர் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்..ஏனெனில், முதுமையில், ஒருவர் முறையற்ற உணவுப்பழக்கம் இருந்தால் உடலுக்கு பல்வேறு பிரச்சனைகள் வந்து சேரும். இந்த வயதில் சத்தான, சரியான உணவை சாப்பிடுவது மிகவும் அவசியமாகும். எனவே , இந்த நேரத்தில் மெல்லுவதில் சிரமம் இருக்கும். ஆகையால், வழக்கமான உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்து கிடைக்காமல் போகலாம். எனினும், திரவ உணவுகள் எடுத்து கொள்வதன் மூலம் இதை ஈடுசெய்ய முடியும். 

 மேலும் படிக்க...Nutrition: தேசிய ஊட்டச்சத்து வாரம் 2022: மிஸ் பண்ணாமல் தினமும் சாப்பிட வேண்டிய 5 பெஸ்ட் ஊட்டச்சத்து உணவுகள்..!

Latest Videos

click me!