உலகின் மிக விலை உயர்ந்த மாம்பழம்! 1 கிலோ ரூ.3 லட்சம்! அப்படி என்ன ஸ்பெஷல்?

Published : Apr 12, 2025, 09:29 AM ISTUpdated : Apr 12, 2025, 09:32 AM IST

உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழம் 1 கிலோ ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாம்பழம் எங்கு கிடைக்கும்? அப்படி என்ன ஸ்பெஷல்? என்பது குறித்து பார்க்கலாம்.

PREV
14
உலகின் மிக விலை உயர்ந்த மாம்பழம்! 1 கிலோ ரூ.3 லட்சம்! அப்படி என்ன ஸ்பெஷல்?

Most Expensive Mango in the World Miyazaki: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோடை காலம் தொடங்கி விட்டது. கோடை காலம் வந்தாலே மாம்பழ சீசன் தொடங்கி விடும். மாம்பழங்களின் வரத்து தொடங்கிவிட்டது. இது கோடையில் 2 முதல் 3 மாதங்கள் மட்டுமே கிடைக்கும். ஒவ்வொரு வீட்டிலும் மாம்பழத்தின் சுவை கண்டிப்பாக இருக்கும். 

மாம்பழத்தில் பாதாம், கிளிமூக்கு மாம்பழம் முதல் அல்போன்சா வரை பல வகைகள் உள்ளன. இவை மிகவும் விரும்பப்படும் மாம்பழங்களில் ஒன்றாகும். மாம்பழங்கள் ரூ.50 முதல் ரூ.100 வரை கிடைக்கின்றன. சில பழங்கள் தரத்தை பொறுத்து விலை அதிகமாக இருக்கும். ஆனால் இன்று நான் உங்களுக்கு ஒரு மாம்பழத்தைப் பற்றி சொல்லப் போகிறேன். அதை வாங்க உங்கள் தங்க நகையை கூட அடகு வைக்க வேண்டியிருக்கும். உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழம் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
 

24
Miyazaki mangoes

இதுதான் உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழம் (Miyazaki mango price)

உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழம் என்ற பட்டத்தைப் பெற்ற மியாசாகி மாம்பழம் ஒரு அரிய ஜப்பானிய வகை மாம்பழமாகும். இந்த மாம்பழம் ஒரு கிலோ ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை இருக்கும். இந்த மாம்பழத்தை பயிரிடுவது மிகவும் கடினம். ஏனெனில் இது ஜப்பானில் மட்டுமே பயிரிட முடியும். முக்கியமாக இது ஜப்பானின் கியூஷு மாகாணத்தில் அமைந்துள்ள மியாசாகி நகரில் பயிரிடப்படுகிறது. இந்த மாம்பழம் காடுகளில் பசுமை இல்லங்கள் அமைத்து பயிரிடப்படுகிறது. இங்குள்ள காலநிலை மாம்பழம் பயிரிடுவதற்கு ஏற்றது. அதனால் இந்த மாம்பழத்தை இந்தியாவிலோ அல்லது வேறு நாடுகளிலோ பயிரிட முடியாது. இதுவே இந்த அரிய மாம்பழத்தின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம்.

விஷூ சத்யாவில் என்னென்ன உணவுகள் பரிமாறப்படும் தெரியுமா?

34
japanese miyazaki mango

ஜப்பானில் சூரியனின் முட்டை (Miyazaki mango from Japan)

ஜப்பானில் மியாசாகி மாம்பழத்தை 'தையோ நோ தமாகோ' என்று அழைக்கிறார்கள். இதன் பொருள் சூரியனின் முட்டை. இந்த மாம்பழம் 'தையோ நோ தமாகோ' என்ற பெயரைப் பெற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதன்படி மாம்பழத்தின் எடை 350 கிராமுக்கு அதிகமாக இருக்க வேண்டும். அதன் தோலின் மூன்றில் இரண்டு பங்கு சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அதில் சர்க்கரையின் அளவு 15% அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும். 10% மியாசாகி மாம்பழத்திற்கு மட்டுமே 'தையோ நோ தமாகோ' என்ற தரம் வழங்கப்படுகிறது.
 

44
World Most Expensive Mangoes

மியாசாகி மாம்பழத்தின் சிறப்பு (Miyazaki mango benefits)

மியாசாகி மாம்பழம் அதன் அழகான அமைப்பு மற்றும் சுவைக்கு பெயர் பெற்றது. இது மஞ்சள் நிறத்தில் இல்லாமல் சிவப்பு நிறத்தில் இருக்கும். இது சாதாரண மாம்பழத்தை விட இனிப்பாகவும், ஜூஸியாகவும் இருக்கும். சுவையுடன் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இதை ரெட் சன் அல்லது ரெட் எக் என்றும் அழைக்கிறார்கள்.

தினமும் காலை வெறும் வயிற்றில் வாக்கிங்!! பலரும் தெரியாம பண்ற மிஸ்டேக் இதுதான்

Read more Photos on
click me!

Recommended Stories