Milk Intake by Age : தினமும் பால் குடிப்பீங்களா? உங்க வயசுக்கு எவ்வளவு பால் குடிச்சா நல்லது? பலர் அறியாத தகவல்

Published : Nov 22, 2025, 06:17 PM IST

எந்தெந்த வயதினர் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
17
Milk Intake by Age

பால் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் தினமும் குடிக்க வேண்டிய முக்கியமான உணவுப்பொருட்களில் ஒன்றாகும். இதில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் பாலில் தான் அதிகமாக உள்ளன. ஆனால் டயட்டில் இருக்கும் சிலர் பாலை குடிப்பதை தவிர்த்து விடுகிறார்கள். இப்படி செய்யும்போது உடலில் பல ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுவது மட்டுமல்லாமல், பல விதமான உடல்நல பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். இது தவிர எந்த வயதினர் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்க வேண்டும் என்று பலருக்கு தெரிவதில்லை. எனவே இந்த பதிவில் எந்தெந்த வயதினர் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

27
குழந்தை பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை..

குழந்தை பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை கண்டிப்பாக தாய்ப்பால் தான் கொடுக்க வேண்டும். ஏனெனில் தாய்ப்பாலில் தான் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதம் வரை சீரான இடைவெளியில் தாய்ப்பால் கொடுக்கவும். அதுவும் ஒரு நாளைக்கு 600 மில்லி பாலை கொடுப்பது ரொம்பவே முக்கியம்.

37
7 முதல் 12 மாதங்கள் வரை...

குழந்தைக்கு ஆறு மாதம் கடந்த பிறகு தாய்ப்பால் தவிர பால் சார்ந்த பொருட்களையும் கொடுக்க ஆரம்பிக்கலாம். இந்த வயதில் குழந்தைக்கு பால் கொடுப்பது ரொம்பவே முக்கியம். எனவே ஒரு நாளைக்கு 600 முதல் 700 மில்லி பாலை கட்டாயம் கொடுக்கவும்.

47
1 முதல் 2 வயது வரை...

பொதுவாக இந்த வயதில் குழந்தைகள் தாய்ப்பால் தவிர மற்ற பாலை குடிக்க விரும்ப மாட்டார்கள். ஒருவேளை பசும்பலை குடித்தால் கூட சில குழந்தைகளுக்கு அது வாந்தி, பேதி கொஞ்சம் பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஒருவேளை அப்படி வாந்தி எடுத்தால் உடனே பசும்பால் கொடுப்பதை நிறுத்தி விடுங்கள். ஆனால் கண்டிப்பாக இந்த வயது குழந்தைக்கு ஒரு நாளைக்கு 800 முதல் 90 மில்லி லிட்டர் பால் குடிக்க கொடுங்கள்.

57
3 முதல் 8 வயது வரை...

குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இந்த காலகட்டம் ரொம்பவே முக்கியம். எனவே இந்த வயதில் இருக்கும் குழந்தைக்கு ஒரு நாளைக்கு 2 1/2 கப் பால் குடிக்க கொடுங்கள். அதுமட்டுமல்லாமல் பால் சார்ந்த உணவுகளையும் அதிகமாக கொடுக்கவும். இப்படி கொடுப்பது மூலம் குழந்தையின் எலும்புகள் மற்றும் தசைகள் வலுவாக இருக்கும்.

67
9 முதல் 15 வயது வரை...

இந்த வயது உள்ளவர்கள் உடல் மற்றும் மன ரீதியாக பாதியளவு வளர்ந்து இருப்பார்கள். மேலும் ஏஜ் வயதிற்குள் இவர்கள் நுழைவதால் ஒரு நாளைக்கு 3000 கலோரிகள் இவர்களுக்கு தேவைப்படும். எனவே இந்த வயது உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 3-4 கப்புக்கும் அதிகமாக பால் குடிக்கலாம்.

77
15 முதல் அதற்கு மேல் உள்ளவர்கள்...

15 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். இந்த வயது உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 1 1/2 கப் பால் கண்டிப்பாக குடிக்க வேண்டும். தினமும் இப்படி குடிப்பதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும், எலும்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories