தற்போது எல்லோருமே தங்களது உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இதனால் பழங்கள், காய்கறிகள் மட்டுமல்ல சாலட்களையும் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் சாலட் தயாரிக்கும் போது சில தவறுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். அவை என்னவென்று இப்போது இந்த பதிவு பார்க்கலாம்.
26
சாலட் தயாரிக்கும்போது வறுத்த காய்கறிகளை பயன்படுத்தக் கூடாது. எப்போதுமே பச்சையாகவே தான் இருக்க வேண்டும். அதுபோல சுவைக்காக அதில் செயற்கை சுவையூட்டிகளை ஒருபோதும் சேர்க்கவே கூடாது. அவை சாலட்டின் நன்மைகளை முற்றிலும் அழித்துவிடும்.
36
சிலர் பிரட்டில் பழங்கள் காய்கறிகள் ஸ்டஃப் செய்து அதனுடன் மயோனசும் சேர்த்து சாப்பிடுவார்கள் ல். ஆனால் இப்படி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
நாம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் வெவ்வேறானது. எனவே, உங்களது ஆரோக்கியத்திற்கு ஏற்றபடி சாலட் செய்து சாப்பிடவும். அதுவும் குறிப்பாக நோயாளிகள், கர்ப்பிணிகள் எந்த மாதிரி சாலட் சாப்பிட வேண்டும். அதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை மருத்துவரிடம் ஆலோசனை கேட்ட பின் சாப்பிடுவது இன்னும் நல்லது.
56
சாலட் தயாரிப்பதற்கு பயன்படுத்தும் காய்கறிகள், பழங்களை நன்கு கழுவி பிறகு பயன்படுத்துங்கள். அதுபோல நார்ச்சத்து, புரதம் போன்றவை அதிகம் இருக்கும் பழங்கள், காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் சுவையை விட நன்மைகள் தான் ரொம்ப முக்கியம்.
66
குறிப்பு : தற்போது பல இடங்களில் சாலட்களை பாக்கெட்டில் அடைத்து விற்கிறார்கள். ஆனால் அவற்றை ஒருபோதும் சாப்பிட கூடாது. ஏனெனில் அவை வெட்டி பல மணி நேரம் அப்படியே வைத்திருப்பார்கள். சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. வீட்டில் தயாரித்த சாலட் தான் ஆரோக்கியத்திற்கு நல்லது.