Honey in Winter : சொன்னா நம்பமாட்டீங்க! குளிர்காலத்துல தூங்குறதுக்கு முன்னால '1' ஸ்பூன் தேன் சாப்பிட்டு பாருங்க! ஆளையே மாத்திரும்

Published : Nov 21, 2025, 06:46 PM IST

குளிர்காலத்தில் இரவு தூங்க செல்வதற்கு முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
14
Honey Before Sleep In Winter

தேன் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது சளி, இருமல், தொண்டை வலிக்கு சிறந்த வீட்டு வைத்தியம். இத்தகைய சூழ்நிலையில் குளிர்காலத்தில் இரவு தூங்க செல்வதற்கு முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

24
தேனில் உள்ள ஊட்டச்சத்துக்கள்...

தேனில் வைட்டமின் சி, பி, இ, பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், இரும்பு போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மருத்துவ குணம் நிறைந்த தேன் குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

34
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது...

குளிர்காலத்தில் தேன் மிகவும் பயனுள்ளது. இதன் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும். வயிற்று ஆரோக்கியத்திற்கும் இது நல்லது.

44
தொண்டை ஆரோக்கியம்..

இரவில் தூங்கும் முன் தேன் சாப்பிடுவது தொண்டை பிரச்சனைகளை குறைக்கும். தொண்டை வலி, இருமலுக்கு நல்லது. இது மன அழுத்தத்தைக் குறைத்து, நல்ல உறக்கத்தைத் தந்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories