Steam Inhalation : ஆவி பிடிக்குற தண்ணீர்ல இந்த 4 பொருளை சேருங்க.. உடனடி நிவாரணம்; பல மடங்கு நன்மைகள்

Published : Nov 21, 2025, 01:12 PM IST

நீங்கள் வெறும் தண்ணீரில் ஆவி பிடிப்பதற்கு பதிலாக அதில் சில மூலிகை பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள். பல மடங்கு அதிகமாக கிடைக்கும். அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

PREV
14
Ayurvedic Steam Therapy

மழை, குளிர் காலம் வந்தாலே சளி, இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு, தொண்டை வலி என பல பிரச்சனைகள் வரிசையாக வந்து கொண்டே இருக்கும். அந்த சமயத்தில் நீராவி பிடிப்பது நன்மை பயக்கும். ஆனால், பெரும் தண்ணீரில் ஆவி பிடிப்பதற்கு பதிலாக அதில் சில மூலிகை பொருட்களை போட்டு ஆவி பிடித்தால் நன்மைகள் பல மடங்காக என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன? அவற்றை எப்படி பயன்படுத்துவது? பயன்கள் என்ன? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

24
என்னென்ன பொருட்கள்?

ஆயுர்வேதத்தின் படி, பிரியாணி இலை, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஓமம் ஆகிய பொருட்களை போட்டு ஆவி பிடிக்கவும்.

34
எப்படி பயன்படுத்த வேண்டும்?

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதை நன்கு கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் பிறகு ஒரு சுத்தமான வெள்ளை துணியில் பட்டை 2 துண்டு, பிரியாணி இலை 2-3, கிராம்பு 6, ஓமம் 2 ஸ்பூன் மூட்டை போல கட்டிக் கொள்ளவும். இப்போது இந்த மூட்டையை வெந்நீரில் போட்டு வழக்கம் போல பெட்ஷீட் போர்த்தி ஆவி ஆவி பிடிக்க வேண்டும்.

44
பயன்கள் என்ன?

- மழை, குளிர் காலங்களில் உண்டாகும் இருமல், சளியை குறைக்க உதவும்.

- நாள்பட்ட நெஞ்சுச் சளியிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.

- மூக்கடைப்பு, தும்மலிலிருந்து கிடைக்கும்.

- அது மட்டுமல்லாமல் சருமத்தை டீடாக்ஸ் ஆக்கவும் உதவும்.

மேலே குறிப்பிட்ட பல படி நீங்கள் மழை, குளிர் காலங்களில் ஆவி பிடித்து வந்தால் பண்மடங்கு நன்மைகள் பெற முடியும்.

Read more Photos on
click me!

Recommended Stories