
வரலாற்று அடையாளங்கள், கட்டிடக்கலை அதிசயங்கள் முதல் திகைப்பூட்டும் கடற்கரைகள் வரை இந்தியாவில் பல குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலங்கள் கொண்ட அழகான நாடு. இது, வரலாற்றைப் பற்றி பேசும் முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் கம்பீரமான கடந்த காலத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு இடத்திலும், சுற்றுலாப் பயணிகள் அப்பகுதியின் அற்புதமான கடந்த காலத்தை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகத்தைக் காணலாம். ஆம், நாம் இ இந்த பதிவில் இந்தியாவில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்கள் குறித்து இங்கு காண்போம்.,
கொல்கத்தா
கொல்கத்தாவில் வங்காளத்தின் ஆசிய சமுதாயத்தால் 1814 இல் நிறுவப்பட்டது, இந்த அருங்காட்சியகத்தில் பழமையான கவசங்கள், எலும்புக்கூடுகள், முகலாய ஓவியங்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவை புகழ்பெற்றவையாகும். இது தொல்லியல், புவியியல், பொருளாதார அழகு மற்றும் கலை என ஐந்து கலைப் படைப்பு மற்றும் அறிவியல் படைப்புகளைக் கொண்ட ஆறு பிரிவுகளைக் கொண்டுள்ளது. உலகின் பழமையான அருங்காட்சியகங்களில் ஒன்றாக இருப்பதால், கொல்கத்தா அருங்காட்சியாகும் சுற்றுலா பயணிகள் விரும்பும் இடமாகும்.
புதுடெல்லி காந்தி நினைவகம்
புதுடெல்லியில் தேசிய காந்தி அருங்காட்சியகம் அமைந்துள்ளது. 1951ம் ஆண்டு புதுதில்லியில் கோடா ஹவுஸ் அருகில் காந்தி பயன்படுத்திய பொருட்கள், அவரின் நினைவுச் சின்னங்களை பாதுகாக்க காந்தி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இதை முன்னதாக பிர்லா மாளிகை என அழைக்கப்பட்டது. பின்னர் 1959ம் ஆண்டு காந்தி சமாதிக்கு அருகிலேயே மாற்றப்பட்டது. அதிகாரப்பூர்வமாக 1961ம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
ஜெய்பூர் அருங்காட்சியகம்
ஜெய்ப்பூர் இந்திய நாட்டின் மேற்கிந்தியப் பகுதியில் அமைந்த இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமாகும். இங்குள்ள ஹவா மஹால் மிகவும் புகழ் பெற்றவையாகும். இந்த அற்புதமான பெரிய சுவர் கொண்ட மாளிகை அரச குடும்ப பெண்கள் விழாக்களை ர் இந்த மாளிகையில் இருந்து கண்டு களிப்பதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டது. இந்தியாவில் சில நகரங்கள் மட்டுமே கடந்த காலத்தின் வளமான பாரம்பரியத்தை காட்சிப்படுத்துகின்றன, அவற்றில் ஜெய்ப்பூரும் ஒன்றாகும்.
ஹைதராபாத் சலார் ஜங் அருங்காட்சியகம்:
சலார் ஜங் அருங்காட்சியகம் ஓவியங்கள், செதுக்கல்கள், உலோக வேலைப்பாடுகள், ஜவுளி வேலைப்பாடுகளின் கண்காட்சியாக திகழ்கிறது. முசி ஆற்றின் தென்பகுதியில் அமைந்துள்ளது. ஐதராபாத் நகரில் டருசிபாவில் அமைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, எகிப்து, சீனா, வட அமெரிக்கா, நேபாளம், பர்மா மற்றும் பிற நாடுகளின் கலைப்பொருட்களை நீங்கள் காணலாம். இது தேசிய அருங்காட்சியகத்தில் ஒன்றாக உள்ளது.
தாஜ்மஹால்:
உலகிலுள்ள ஏழு அதிசய சின்னங்களில் ஒன்றாக தாஜ்மஹால் கருதப்படுகிறது. முகாலயப்பேரரசர் ஷாஜஹான் அவர்களால் அவரது அழகிய மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக கட்டப்பட்டுள்ளது. சர்வதேசளவில் சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் அற்புதங்களில் ஒன்றாகவும் இது இருக்கிறது. இதன் கட்டிடக் கலையின் மகத்துவம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். 1632ம் ஆண்டில் துவங்கப்பட்ட இதன் கட்டுமானத்தை முடிப்பதற்கு 21 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இதனை நிர்மாணத்தில் பங்கேற்றிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இந்த மாளிகை வளாகத்தின் பிரதான அம்சம் மும்தாஜின் கல்லறை அமைந்திருக்கும் விசாலமான கட்டமைப்பாகும்.
ஆக்ரா தாஜ்மஹால்
இது ஏழைகளின் தாஜ்மஹால் என்றும் அழைக்கப்படுகிறது. ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ஷாஜஹான், மும்தாஜ்க்காக கட்டியது போன்று, ஔரங்கபாத்தின் தாஜ்மஹால் பிரதியானது ஔரங்கசீப்பின் மகன் இளவரசர் அசம் கானால் அவரது பேரரசி-தாய் ரபியா-உத்-தௌராணியின் நினைவாக கட்டப்பட்டது, மேலும் இது தக்காணத்தின் தாஜ் என்றும் குறிப்பிடப்படுகிறது. நான்கு மினாராக்களுடன், அதைச் சுற்றி தோட்டங்கள் உள்ளன.மேலும் இது சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாகும்.
ஹுமாயூனின் கல்லறை, டெல்லி:
ஹுமாயூனின் கல்லறை உண்மையில் தாஜ்மஹாலை விட பழமையானது என்பது உங்களுக்குத் தெரியுமா..?வரலாற்று பதிவுகள் செல்ல வேண்டுமானால், தாஜ்மஹாலின் தளவமைப்பு மற்றும் வடிவமைப்பு ஹுமாயூனின் கல்லறையில் இருந்து ஈர்க்கப்பட்டது. அக்பரால் கட்டப்பட்ட ஹுமாயூனின் கல்லறை இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் அமைந்துள்ளது. இந்த நினைவுச்சின்னம் சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்டிருந்தாலும், அதன் அமைப்பு ஆக்ராவின் தாஜ்மஹாலைப் போலவே உள்ளது.