Side effects of coffee: காபி பிரியர்களே...? இதை படிங்க...! இனிமேல் காபியை விரும்பவே மாட்டீர்கள்...

First Published Aug 6, 2022, 7:00 AM IST

Side effects of coffee: ஒவ்வொரு முறையும் நீங்கள் காபி குடிக்கும் போது குறைந்த அளவு குடிப்பது தான் நல்லது. இல்லையென்றால் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? வாருங்கள் பார்க்கலாம்.

Side effects of coffee:

இன்றைய மேற்கத்திய வாழ்கை முறையில் காபி, டீயை விட்டு விட்டுவிடுவது ஒருவருக்கு அவ்வளவு எளிதானது ஒன்றும் அல்ல. சிலருக்கு காபி, டீ, குடித்ததால் தான் வயிற்று கோளாறு சரியாகி, பாத்ரூம் போக முடியும் என்பவர். சிலரோ காபி, டீ குடித்தால் தான் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும் என்பர். இப்படி ஒவ்வொருவருக்கும் காபி குடிக்க ஒரு ஒரு காரணம் இருக்கும். காப்பி குடிப்பதில் பல நன்மைகள் இருந்தாலும், அதை அதிகமாக எடுத்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடும். எனவே, நீங்கள் உடனடியாக காபி குடிப்பதை நிறுத்துவதற்கான  5 முக்கிய காரணங்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள். 
 

Side effects of coffee:

இரத்த அழுத்த பிரச்சனை:
 
உடற்பயிற்சியின் போது, ​​படபடப்பு அல்லது இதயத் துடிப்பு சீரற்று போகலாம், காலப்போக்கில் உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம் என்ற வாய்ப்பும் அதிகமாக காபி குடிப்பவர்களுக்கு இருக்கிறது.

மேலும் படிக்க...Eggs Periods: பெண்களே அலர்ட்..! மாதவிடாய் நேரத்தில் நீங்கள் முட்டை சாப்பிடலாமா? நிச்சயம் தெரிஞ்சுக்கோங்கோ ...

Side effects of coffee:

தூக்கத்தை கெடுக்கிறது:

ஒரு நாளைக்கு மூன்று கப் காபிக்கு மேல் குடிப்பவர்களுக்கு தூக்கம் குறைவாக இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, காஃபினேட் பானங்கள் குடிக்காதவர்கள் மற்றும் அதிக அளவில் காபி குடிப்பவர்களுக்கு இடையே 79 நிமிட தூக்க வித்தியாசம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, 
தூங்குவதற்கு சிரமப்படுபவர்கள் கண்டிப்பாக  காபி குடிக்க வேண்டாம்.

Side effects of coffee:

மனநிலையை மோசமாக்கும்

காஃபின் அட்ரினலின் போன்ற கேடகோலமைன்களை அதிகரிக்கிறது. காஃபின் அதிக அளவில் பதற்றத்தையும், நடுக்கத்தையும் ஏற்படுத்தலாம். மேலும், அதிக அளவு காபி குடிப்பது சர்க்கரை நுகர்வு அதிகரிக்கும்.

மேலும் படிக்க...Eggs Periods: பெண்களே அலர்ட்..! மாதவிடாய் நேரத்தில் நீங்கள் முட்டை சாப்பிடலாமா? நிச்சயம் தெரிஞ்சுக்கோங்கோ ...

Side effects of coffee:

இதய பாதிப்பு:

காபியில் அதிகளவு காஃபின் இருப்பதால் இதய நோய் உண்டாகும் என்ற கருத்து பரவலாக நிலவியது. திடீரென்ற மாரடைப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, ஒருவர் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 400 மில்லிகிராம் காபி குடிக்கலாம். 

Side effects of coffee:

கருவுறுதலை பாதிக்கலாம்

ஒவ்வொரு முறையும் நீங்கள் காபி குடிக்கும் போது குறைந்த அளவு குடிப்பது தான் நல்லது. ஏனெனில் காபி குடித்த அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை இரத்த ஓட்டத்தில் காஃபின் உச்சம் பெறுகிறது. எனவே, ஒரு நாளைக்கு ஐந்து கப் காபிக்கு மேல் குடிப்பவர்களுக்கு குழந்தை பெறும் தன்மை குறையலாம். அதேபோன்று கர்ப்பிணி பெண்கள் நிச்சயமாக ஒரு நாளைக்கு 200 மி.கி.க்கு குறைவாக குடிக்க வேண்டும், ஏனெனில் அதிக அளவு காபி நுகர்வு கரு வளர்ச்சியை பாதிக்கலாம்.

மேலும் படிக்க...Eggs Periods: பெண்களே அலர்ட்..! மாதவிடாய் நேரத்தில் நீங்கள் முட்டை சாப்பிடலாமா? நிச்சயம் தெரிஞ்சுக்கோங்கோ ...

click me!