இன்றைய மேற்கத்திய கலாசாரத்தில் நீரிழிவு நோய் என்பது உலகளாவிய நோயாக மாறி வருகிறது. இரத்த குளுக்கோஸ் அளவானது அதிகமாகும் போது இது கடுமையான பாதிப்பை உண்டாக்குகிறது. இது உங்கள் கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்புகளை சேதப்படுத்தும். நீரிழிவு நோய் இதய நோய், பக்கவாதம் போன்ற பல நோய்களை ஏற்படுத்தக் கூடியது. குறிப்பாக, இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 25 வயதிற்குட்பட்ட 4 பேரில் ஒருவருக்கு இந்த டைப்-2 நீரிழிவு நோய் உள்ளது எனவும் கூறப்படுகிறது.
எனவே, நீரிழிவு நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அந்த வரிசையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சளைப் பயன்படுத்தினால், குளுக்கோஸ் அளவு அப்படியே இருக்கும். நீரழிவு நோயாளிக்கு மஞ்சள்பயன்பாடு பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
36
Turmeric powder:
மஞ்சள் ஒரு கிருமி நாசினியாக பயன்பட்டு நச்சுக்களை அழிக்கும் என்பது பொதுவாக அனைவருக்குமே தெரியும், தினமும் சிறிதளவு உங்களது உணவில் மஞ்சள் சேர்த்து கொள்வதால், அது உங்கள் உடலில் பால்வேறு ஆரோக்கிய நண்மைகளை வழங்குகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு மஞ்சள் பயன்பாடு
மஞ்சள் என்பது இந்திய சமையல் அறையில் இடப்பெற்றுள்ள ஒரு மசாலா பொருள் ஆகும். ஆனால் மஞ்சள் நுகர்வு நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும் என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். ஆம், 40 வயதை கடந்து விட்டாலே பலருக்கு கேட்காமல் வந்து விடுகிறது சர்க்கரை நோய். சர்க்கரை அளவை குறைப்பதற்கு பலர் மாத்திரை, இன்சுலின் போன்றவை எடுத்து கொண்டாலும், மஞ்சளை நீங்கள் உணவில் சேர்த்து கொள்வதால், அது இயற்க்கை மருந்தாக செயல்பட்டு உங்களின் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. மேலும், உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது.
நமது ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கிறது. இரத்த கொழுப்பு என்பது அதிக கலோரிகள் கொண்ட உணவை சாப்பிடும்போது உங்கள் இரத்தத்தில் உருவாகும் ஒரு வகை கொழுப்பு. மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், உயரும் குளுக்கோஸைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
56
breast cancer
புற்றுநோயை தடுக்கும் மஞ்சள்
மஞ்சளில் உள்ள குர்குமின் என்கிற வேதிப்பொருள், புற்றுநோய் எதிராக செயல்பட கூடியது. நச்சுத்தன்மை இல்லாத குர்குமின், ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜைகளில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய லுக்கிமியா அணுக்களை அழிக்கும் தன்மை கொண்டது.
66
Turmeric powder:
மூட்டு வலியைப் போக்க மஞ்சள்
இரத்தப்போக்கை நிறுத்தவும் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறவும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, காயம் ஏற்பட்டால் இந்த மசாலாவை பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும். மேலும், மஞ்சளை பாலில் மஞ்சள், கருமிளகு கலந்து குடித்து வந்தால், அது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு நிச்சயம் நிவாரணம் கிடைக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.